இந்திய கிரிக்கெட்

எங்க மேல இவ்ளோ கோபப்படுறாரு.. அவர் மட்டும் அதை செஞ்சது நியாயமா.? இங்கி கோச் சவுத்தி கேள்வி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் நடந்த நிகழ்வு குறித்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் டிம் சவுத்தீ சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டி வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 387 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, அதற்கு பிறகு முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியை போலவே 387 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

இந்த சூழ்நிலையில் நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் முடிய சில மணித்துளிகள் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் களம் இறங்கினாலும் முதல் ஓவர் மட்டுமே விளையாட வேண்டும் என்று முடிவு செய்து பும்ராவின் முதல் ஓவரை முடிக்க விடாமல் தாமதப்படுத்தியது. இது இந்திய அணியின் கேப்டன் கில்லுக்கு எரிச்சலூட்ட களத்தில் காரசாரமான விவாதத்தை இந்திய கேப்டன் வெளிப்படுத்திய நிலையில் அது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சவுத்தீ சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவர் செஞ்சது சரியா?

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இருதரப்பினரும் இறுதியில் உற்சாகமாக விளையாடதை பார்ப்பது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். நேற்று இந்திய அணியின் கேப்டன் படுத்துக்கொண்டு மசாஜ் செய்து கொண்டிருந்தார். ஆனால் அது குறித்து அவர்கள் எந்த புகார் தெரிவிக்கவில்லை. நீங்கள் நாள் முடியும் தருவாயில் இருக்கும்போது நேரத்தை வீணடிக்க ஏதேனும் ஒரு முயற்சியில் ஈடுபடுவது பொதுவானதாகும். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும்.

அந்த நாளை முடிக்க இது ஒரு உற்சாகமான வழியாகும். இரு தரப்பினரும் நல்ல கிரிக்கெட் மற்றும் நல்ல மனநிலையில் விளையாடி இருக்கின்றனர். இந்தப் போட்டி மூன்று நாட்கள் முடிந்து விட்டது இருப்பினும் இரண்டு தரப்பு வீரர்கள் உற்சாகமாக விளையாடுவதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts