இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் களத்தில் ஜோ ரூட் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து களத்தில் என்ன நடந்தது? என தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.
இந்திய அணி 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் நேற்று இரண்டாவது இன்னிசை தொடங்கி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது ஐந்தாவது டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்திற்குள் நுழைந்து இருக்கிறது.
ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து
நேற்று முதல் செஷனில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் ஆச்சரியப்படுத்தினார்கள். இரண்டு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து வலிமையாக இருந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது ஸ்டேஷனில் இந்திய பந்துவீச்சாளர்கள் திரும்பி வர ஜோ ரூட் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து பிரசித் கிருஷ்ணா பேசிய பொழுது ” ஜோ ரூட் ஒரு பெரிய லெஜெண்ட் களத்திற்கு வெளியே நல்ல உறவை வளர்க்கவே விரும்புகிறேன். அதே சமயத்தில் நான் சாதாரணமாக சொன்ன ஒரு வார்த்தைக்கு அவர் கோபப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது” என்று தெரிவித்திருந்தார்.
தினேஷ் கார்த்திக் விளக்கம்
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” ஜோ ரூட் இதற்கு முன்பு இப்படி நடந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. அவர் இப்படியான எதிர்வினைகள் செய்யக்கூடிய ஆள் கிடையாது. பிரசித் கிருஷ்ணா ஏதோ சொன்னதற்கு ஜோர் ரூட் ‘ இங்கு மிகவும் புத்திசாலியாக இருக்க முயற்சி செய்ய வேண்டாம்” என்று அவர் சொன்னார். இங்கிருந்து விஷயங்கள் நடக்க ஆரம்பித்தது”
இதையும் படிங்க : பும்ரா இல்லனா சொல்லுங்க.. மிச்சத்த நான் பாத்துக்குறேன்.. சிராஜ் அசுர பவுலிங்.. கிரிக்கெட் உலகம் ஆச்சரியம்
“இதைத்தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. அங்கிருந்து பிரச்சனை உருவாகும் ஆரம்பித்தது. இந்த தொடர் எப்படி இதுவரை சென்று கொண்டிருக்கிறது என்பதை அந்த இரண்டாவது செஷன் காட்டியது. முதலில் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் அடுத்து உடனடியாக இந்திய அணியின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்த தொடர் முழுக்க இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






