இந்திய கிரிக்கெட்

4.69 ரன் ரேட்.. இங்கிலாந்துக்கு முதல் முறை கிடைத்த வாய்ப்பு.. நடுவில் நடந்த சோகம்.. ஆஸி மகிழ்ச்சி

இன்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

இந்தத் தொடரில் ஏற்கனவே நடைபெற்றுள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா மூன்றரை வென்று தொடரையும் வென்று விட்டது. நான்காவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்று இருந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.

வழக்கம்போல் சரிவு

இதைத்தொடர்ந்து முதலில் இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரவுலி 29 பந்தில் 16 ரன், பென் டக்கெட் 24 பந்தில் 27 ரன், ஜேக்கப் பெத்தேல் 23 பந்தில் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி உண்டானது.

இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் மற்றும் துணை கேப்டன் ஹாரி புரூக் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இவர்கள் விக்கெட்டை விடாமலும் அதே நேரத்தில் அதிரடியாகவும் தொடர்ந்து விளையாடி இருவருமே அரை சதம் அடித்தார்கள். மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் இங்கிலாந்து அணி 200 ரன்கள் தாண்டியது.

- Advertisement -

இடையில் நடந்த சோகம்

இந்த நிலையில் 45 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் இங்கிலாந்து எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து இன்றைய நாள் முடிவு வரையில் போட்டியை மீண்டும் தொடங்க முடியவில்லை. ஜோ ரூட் 103 பந்துகளில் 72 ரன்கள், ஹாரி புரூக் 92 பந்தில் 78 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டால அதை செய்ய முடியாது.. ருதுராஜாலதான் செய்ய முடியும்.. செலக்சன் தவறு – அஸ்வின் விமர்சனம்

இந்தத் தொடரில் முதல் முறையாக மூன்று விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்து 200 ரன்கள் தாண்டி இருந்தது. ஒரு ஓவருக்கு 4.69 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடு இருந்தால் இன்றைய ஆட்ட நாள் முடிவில் நல்ல நிலைக்கு இங்கிலாந்து சென்றிருக்கும். மேலும் இந்த போட்டியை வெல்லவும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் மழை நடுவில் வந்து இங்கிலாந்துக்கு சோதனையை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: Aus vs Eng