உலக கிரிக்கெட்

ஆஸி அணியை வீழ்த்த.. ஐபிஎல் தொடர் எனக்கு இப்படித்தான் பெரிய உதவியா இருந்துச்சு – இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பேட்டி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியான பாக்ஸிங் டே டெஸ்டில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தல் ஐபிஎல் தொடர் தனக்கு எவ்வாறு உதவிகரமாக அமைகிறது என்று கூறி இருக்கிறார்.

மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 45. 2 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதற்குப் பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தது. அதற்குப் பின்னர் 42 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 132 ரன்கள் கிடைக்க இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்து அணி விளையாட ஆரம்பித்தது.

178 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி இருப்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று பல ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஜேக்கப் பெத்தல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

நான்காவது இடத்தில் களம் இறங்கிய அவர் 46 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரியுடன் 40 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா முன்னணியில் முதல் வெற்றியை பெற்றது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தனக்கு இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு பெரிய அளவில் உதவிகரமாக அமைந்தது என்று ஜேக்கப் பெத்தல் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:148 ஆண்டு கால ஆஷஸ் வரலாற்றை தயவு செஞ்சு கெடுத்துராதீங்க.. உங்க விளையாட்டை பார்க்க முடியல.. முன்னாள் ஆஸி லெஜன்ட் ஆதங்கம்

இதுகுறித்து அவர் கூறும் போது “ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய பிறகு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது எனக்கு நிச்சயமாக அதிக நம்பிக்கை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் 50 ஐபிஎல் தொடரில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் கூடுவதைப் போல உணர்ந்தேன். ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு உதவிகரமாக அமைந்தது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by