ஐபிஎல் 2025

இந்திய ஏ அணிக்கு எதிராக.. இங்கிலாந்து ஏ அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் மகனுக்கு இடம்.. முழு தகவல்கள்

இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து ஏ அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இங்கிலாந்தின் நட்சத்திர முன்னாள் வீரரின் மகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி ஜூலை 20ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன்பாக இரு நாடுகளின் ஏ அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்திய ஏ அணி விபரங்கள்

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய ஏ அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக இருக்கிறார். அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் முதலில் வெளியேறி விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜெய்ஸ்வால், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், டெல்லி கருண் நாயர் வரையில் முக்கிய வீரர்கள் அனைவருமே இந்திய ஏ அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

மேலும் இரண்டாவது இந்திய ஏ அணி டெஸ்டின் போது சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்களுக்கு நல்ல பயிற்சியாகவும் அமையும். மேலும் காலியாக இருக்கும் இடங்களுக்கு யாரை தேர்வு செய்வது என்பது முடிவு செய்யவும் வசதியாக இருக்கும்.

- Advertisement -

நட்சத்திர வீரரின் மகனுக்கு இடம்

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து ஏ அணியில் இங்கிலாந்து முன்னாள் நட்சத்திர வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப் மகனான ராக்கி பிளின்டாப்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மூத்த வீரரான கிரீஸ் வோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 30-ம் தேதி கேன்பரி மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மே 6-ம் தேதி நார்த்தாம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணியை விட இந்திய அணிக்கு இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களும் தயாராவதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இதையும் படிங்க : விராட் ரோஹித் இல்லனாலும் இந்தியாவ எதுவும் பண்ண முடியாது.. நான் நேரடியா அத பாத்தேன் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி

இங்கிலாந்து ஏ அணி : ஜேம்ஸ் ரெவ் (கே), ஃபர்ஹான் அகமது, ரெஹான் அகமது, சோனி பேக்கர், ஜோர்டான் காக்ஸ், ராக்கி பிளின்டாஃப், எமிலியோ கே, டாம் ஹைன்ஸ், ஜார்ஜ் ஹில், ஜோஷ் ஹல், எடி ஜாக், பென் மெக்கின்னி, டான் மௌஸ்லி, அஜீத் சிங் டேல் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

- Advertisement -
Published by

Recent Posts