இங்கிலாந்து டெஸ்ட்.. அசத்தலான பிளேயிங் லெவனை அறிவித்த இலங்கை அணி.. இந்திய தொடரின் ஹீரோவுக்கு இடமில்லை

0
230

இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்ற பிறகு அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி வீரர்கள் இந்தத் தொடரில் நம்பிக்கையோடு களம் இறங்கி விளையாட இருக்கிறார்கள்.

- Advertisement -

சமீப ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அடைந்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தனது சொந்த மண்ணில் நடப்பு டி20 சாம்பியன் ஆன இந்திய அணியை வீழ்த்தியது. தற்போது அதே உத்வேகத்தோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை ஆயத்தமாகி வருகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கடைசி 7 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்துள்ளது. மற்ற ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த இலங்கை அணியில் சண்டிமால், மேத்யூஸ், கருண ரத்னே போன்ற அனுபவ வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விதமாக இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் அசத்திய ஜெப்ரி வாண்டர்சே இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய பேட்டிங் வரிசையை திணறடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் மற்றும் இளமை கலந்த இலங்கை அணிக்கு தனஞ்செயா டி செல்வா கேப்டனாக இலங்கை அணியை வழிநடத்த உள்ளார்.

இதில் வலது கை வேகப் பந்துவீச்சாளரான மிலன் ரத்நாயக்கே, சக வேகப்பந்துவீச்சாளர் ஆன லகிரு குமாராவுக்கு பதிலாக சர்வதேச அரங்கில் களமிறங்க உள்ளார். இலங்கை அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று மிகுந்த உற்சாகத்தோடு காணப்படுகிறது. தற்போது அதே நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் நம்பிக்கையாக எதிர்கொள்ளும் என்பது சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க:எங்க ஆஸி வீரர்கள் இல்லை.. 3 ஃபார்மேட்லயும் பெஸ்ட் பவுலர் இந்த 30 வயது வீரர் தான்- ரிக்கி பாண்டிங் பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கையின் பிளேயிங் லெவன் :திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (சி), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, மற்றும் மிலன் ரத்நாயக்க.

- Advertisement -