ENG vs NZ.. 4 ரன் தாண்டாத 6 பேர் இருந்தும் 368 ரன்.. ஸ்டோக்ஸை விட வெறும் 5 ரன் மட்டும் எடுத்த நியூசி.. இங்கிலாந்து அதிரடி வெற்றி!

0
2964
Stokes

நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிந்திருக்க, தற்பொழுது நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதலில் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில், இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்றிருக்க, மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்து லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய டிரண்ட் போல்ட் அதிரடியாக பேர்ஸ்டோ 0, ஜோ ரூட் 4 என அனுப்பி வைத்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மலான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்த ஜோடி அதிரடியாக 199 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டேவிட் மாலன் 95 பந்தில் 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஒருபுறத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிரடி நிற்கவேயில்லை. அவர் நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினார்.

இடையில் கேப்டன் ஜோஸ் பட்லர் 38, லியாம் லிவிங்ஸ்டன் 11, மொயின் அலி 12, சாம் கரன் 3, கிரீஸ் வோக்ஸ் 3, கஸ் அட்கிஸ்டன் 2 என சொற்ப ரன்களில் தொடர்ந்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இன்னொரு முனையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 124 பந்தில் 15 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் உடன் 182 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் 400 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, இறுதிக்கட்டத்தில் விக்கெட் சரிவை சந்திக்க, 48.1 ஓவரில் 368 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. டிரண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு கிளன் பிலிப்ஸ் 76 பந்தில் 72 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ரச்சின் ரவீந்தரா 28 ரன்கள் எடுத்தார். மற்ற எந்த நியூசிலாந்து பேட்ஸ்மேனும் 20 ரன்னை தொடவே இல்லை. எனவே 39 ஓவர்களில் நியூசிலாந்து அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முடிவில் இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிரீஸ் வோக்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி தற்பொழுது 2-1 என முன்னிலையில் இருக்கிறது!