ENG-LvsIND-A.. இங்கிலாந்து 51 ஓவர்களில் சுருண்டது.. ரஜத் பட்டிதார் அதிரடியில் இந்தியா முன்னிலை!

0
884
Rajat

இங்கிலாந்து அணி நடைபெறும் ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் மாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு பயிற்சி பெறும் விதமாக அபுதாபியில் நான்கு உலக தரமான மைதானங்களை எடுத்து 65 ஆடுகளங்களை இந்திய சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உருவாக்கி இங்கிலாந்து அணி ஒன்பது நாட்கள் பயிற்சி எடுத்து எப்போதும் இல்லாத அளவுக்கு தயாராகிறது.

இதற்கு நடுவே இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்திய ஏ அணி உடன் பயிற்சி நிமித்தமாக சில போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. அந்த அணியில் ஏழாவதாக வந்த டேன் மௌஸ்லி மற்றும் தாக்குப்பிடித்து 60 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் 45 ரன்கள், அலெக்ஸ் லீஸ் 35 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் 51.1 ஓவரில் இங்கிலாந்து லயன்ஸ் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய ஏ அணியின் தரப்பில் மானவ் சுதார் 3 விக்கெட், ஆகாஷ் தீப் 2 விக்கெட், வித்வத் கவரப்பா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் பல்கிட் நரங் மூவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து விளையாடிய இந்திய அணி, 26 ஓவர்கள் விளையாடி, இன்றைய முதல் நாள் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரராக வந்த ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 75 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 61 ரன்கள் எடுத்தும், இவருக்கு துணையாக விளையாடிய தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தும் களத்தில் இருக்கிறார். நாளை ஒருநாள் போட்டியில் எங்கே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!