சீசன் துவங்கும் முன்னரே பேசி வைத்துக்கொண்டோம்; வெற்றியோ, தோல்வியோ! இறங்கி அடிப்பது தான் எங்களோட டெம்ப்ளேட்! – ரோகித் சர்மா பேட்டி!

0
8333

‘வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் சீசன் முழுவதும் நம் அணுகுமுறையில் மாற்றங்கள் இருக்கக்கூடாது’ என்று சீசன் துவங்கும் முன்னரே பேசிக்கொண்டோம் என்றார் ரோகித் சர்மா.

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பதற்கு 214 ரன்கள் குவித்தனர். 215 ரன்கள் இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொடுக்க, டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை அப்படியே எடுத்துச் சென்று பினிஷ் செய்து கொடுத்தனர்.

- Advertisement -

18.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த வெற்றி பெற்ற அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

“2006-07ஆம் ஆண்டுகளில் டி20 போட்டிகள் துவங்கிய காலத்தில் 150 ரன்கள் அடித்தாலே அது வெற்றி பெறக்கூடிய ஸ்கோர். இப்போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கிறது. நான் ஆராய்ந்து பார்த்த போது, இந்த சீசனில் சராசரி ஸ்கோர் 180 ஆகும். அந்த அளவிற்க்கு மாறிவிட்டது.

சூர்யாகுமார் யாதவ் ஸ்டம்பிற்கு பின்னே அடிப்பதில் பலம் கொண்டவர். அதை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார். இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார்கள்.

- Advertisement -

இந்த சீசன் துவங்குவதற்கு முன்பு வீரர்கள் அனைவரிடமும் நான் பேசியபோது, ‘நாம் அனைவரும் இணைந்து நமக்கு என்ன கிரிக்கெட் வருமோ அதை செயல்படுத்த வேண்டும். அதற்கான முடிவுகள் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாம். வெற்றியோ தோல்வியோ நாம் நம்முடைய திட்டத்திலிருந்து மாறுபட வேண்டாம். அதில் பிடிப்புடன் இருக்க வேண்டும்.’ என்றும் பேசிக் கொண்டிருந்தேன். அதைத்தான் செயல்படுத்தி வருகிறோம்.

கிஷான் கிஷன் மிகவும் பலம் பொருந்திய வீரர். இன்று விளையாடிய நிறைய ஷார்ட்களை அவர் வலைப்பயிற்சியில் தீவிரமாக பயிற்சி செய்தார். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக நான் கண்காணித்து வருகிறேன். கூடுதலாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

டெத் ஓவர்களில் நாங்கள் ஒரு சில ஓவர்களை இன்னும் கட்டுப்பாடோடு வீசவேண்டும். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்துவிட்டோம். மேலும் இதுபோன்ற ஸ்கோர்களை சேஸ் செய்யும் அழுத்தமான சூழலில் தான் நம்முடைய சிறந்த ஆட்டமும் வெளிப்படும் என்று பார்க்கிறேன்.” என பேசினார்.