ஐசிசில ஜெய்ஷா இருக்கிறப்போ.. இந்தியாவுக்கு இப்படி ஆகுறது கிரிக்கெட்டுக்கு நல்லதே இல்ல – இங்கிலாந்து சேர்மன் பேட்டி

0
1576

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரை தொகுத்து வழங்குவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதில் இந்திய அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அது குறித்து இங்கிலாந்து அணியின் சேர்மன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக பாகிஸ்தானில் 2008ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு தொடரில் விளையாடியது. அதற்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கு உள்நாட்டு பிரச்சனைகளின் காரணமாக கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதை முற்றிலுமாக தவிர்த்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2013ஆம் ஆண்டு இந்தியாவில் இருதரப்பு தொடரில் விளையாடியது. அதற்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணி பங்கேற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் மினி உலகக் கோப்பை தொடரை அடுத்த வருடம் பாகிஸ்தான் அணி நடத்தும் நிலையில் அதில் இந்திய அணி பங்கேற்பதில் தயக்கம் காட்டி வருகிறது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை நடந்த நிலையில் அதில் இந்திய அணி பங்குபெறும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தற்போது ஐசிசிஐயின் தலைவராக இருக்கும் பிசிசிஐ முன்னாள் செயலாளர் ஜெய்ஷா இது குறித்து ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் தலைவர் ரிச்சர்ட் தாம்சன் கூறுகிறார்.

- Advertisement -

இந்தியா பங்கு பெறுவதில் சிக்கல்

இதுகுறித்து அவர் கூறும் போது “பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பங்குபெறாமல் இருப்பது அது கிரிக்கெட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. எனவே இதில் பிசிசிஐயின் முன்னாள் செயலாளரும், ஐசிசியின் தலைவர் ஆன ஜெயிஷா இதில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் என்பது சுவாரசியமாக உள்ளது. இதில் இருக்கும் அரசியல் விஷயங்களை களைந்து ஒரு புதிய வழியை கண்டுபிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:ஆஸியில் கில் அந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. எதையும் செய்யும் இவரை யூஸ் பண்ணுங்க – அனில் கும்ப்ளே பேச்சு

அவர்கள் நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும். அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா பங்குபெறும் வழியை கண்டுபிடிப்பார்கள் என்று நினைக்கிறேன். சரித்திரங்கள் நமக்கு சில விஷயங்களை காட்டியது போல இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் இதற்கு ஒரு தீர்வை கண்டறிவார்கள்” என்று கூறுகிறார்.

- Advertisement -