டி20 கிரிக்கெட்டில் டிவைன் பிராவோ புதிய உலகச்சாதனை; வீடியோ இணைப்பு!

0
109
Dwayne bravo

டி20 கிரிக்கெட் வடிவம் என்பது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கானது என்பது போலத்தான் இருக்கிறது. முதல் இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பைகளை கைப்பற்றிய அவர்கள் பின்பு மெல்ல மெல்ல சரிந்து 50 ஓவர் உலகக் கோப்பைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது போனார்கள்.

ஆனால் டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்காக உலக கோப்பைகள் நடத்தப்பட்டபோது இதில் அவர்கள் இரண்டு முறை உலகக்கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள். இருந்தும் தற்பொழுது அவர்கள் நாட்டில் கிரிக்கெட் நிலைமை சரியில்லை. கிரிக்கெட் வாரியத்திற்கும் வீரர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் என்பது பல தீவுக் கூட்டங்களின் ஒருங்கிணைப்பு. அவர்கள் ஒரே நாடும் கிடையாது. கிரிக்கெட் விற்காக மட்டுமே சேர்ந்து விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இந்த காரணத்தால் பல கிரிக்கெட் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடுவதை விட, பிற நாடுகள் நடத்தும் டி20 தனியார் தொடர்களில் விளையாடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு நிறைய பணமும் புகழும் கிடைக்கிறது. அவர்கள் நிறைய டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

இதனால் இந்தக் குறிப்பிட்ட கிரிக்கெட் வடிவத்தில் பல சாதனைகளை அவர்களால் செய்ய முடிகிறது. சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கீரன் பொல்லார்டு தனது ஆறு 600வது டி20 போட்டியில் களமிறங்கி சாதனை படைத்தார். இதுதான் ஒரு வீரர் அதிகமாய் விளையாடிய டி20 போட்டிகளின் எண்ணிக்கையாகும்.

- Advertisement -

தற்பொழுது வெஸ்ட்இண்டீஸ் சேர்ந்த இன்னொரு வீரர் டிவைன் பிராவோ பந்துவீச்சில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இங்கிலாந்தில் நடந்து வரும் 100 பந்து கிரிக்கெட் தொடரில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், ஓவல் இவின்சிபிலஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவருக்கு ஆர் நூறாவது விக்கெட்டதாக அமைந்தது இதன்மூலம் டி20 போட்டிகளில் ஆறுநூறு விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

இந்தச் சாதனைகள் இவர் முதலிடத்தில் இருக்க ஆப்கானிஸ்தானில் ரசித்தான் 466 விக்கெட்டுகளோடு இரண்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சுனில் நரைன் 460 விக்கெட்டுகளோடு இரண்டாம் இடத்திலும் உள்ளார். பிராவோ இந்த 600 விக்கெட்டில் 78 விக்கெட்டுகள் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக வீழ்த்தி இருக்கிறார். பிராவோ இதுவரை டி20 போட்டிகளுக்காக மட்டுமே உலக அளவில் 22 அணிகளுக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -