4,4,4,6.. தோனியிடம் கற்ற பாடம்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் அமீர் ஓவரை விளாச.. அமேசான் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி.. சிபிஎல் 2024

0
86
Pretorius

தற்போது வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் டி20 லீக் சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் சிஎஸ்கே வீரர் தென் ஆப்பிரிக்காவின் டிவேன் பிரிட்டோரியஸ் அமேசான் வாரியர் சனிக்காக கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து தனது அணியை அசத்தல் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் ஜோடி கலக்கல்

இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற அமேசான் வாரியர் அணி முதலில் பத்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆன்ட்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணிக்கு பாகிஸ்தான் அணியின் பகார் ஜமான் 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து வந்த கோஃபி ஜேம்ஸ் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து கடைசி கட்டத்தில் இன்னொரு பாகிஸ்தான் வீரரான சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இமாத் வாசிம் அதிரடியாக 21 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்தார். இறுதியாக அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குடகேஷ் மோட்டி நான்கு ஓவர் பந்து வீசி 25 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

கடைசிப் பந்து சிக்ஸர்

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ஆப்கானிஸ்தானின் ரகமன்னுல்லா குர்பாஸ் 14 பந்துகளில் 20, ஷாய் ஹோப் 34 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். போட்டி கடைசி ஓவர் வரை செல்ல ஆரம்பித்தது. ரோமாரியோ செப்பர்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் அதிரடியாக எடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கடைசி ஓவருக்கு அமேசான் வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிவேன் பிரட்டோரியஸ் மற்றும் ஷமர் ஜோசப் இருவரும் இருந்தார்கள். கடைசி ஓவரை பாகிஸ்தானின் முகமது ஆமீர் வீசினார்.

இந்த ஓவரை முழுமையாக டிவேன் பிரட்டோரியஸ் எதிர்கொண்டார். அந்த ஓவரின் முதல் பந்தை அடிக்க தவறிவிட்ட அவர் அடுத்த இரண்டு பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார், இதற்கு அடுத்து நான்காவது பந்தை தவறவிட்டார். அடுத்து ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அதிரடியாக கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெல்ல வைத்தார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் பத்து பந்தில் 20 ரன்கள் எடுத்தார். அமேசான் வாரியர்ஸ் மூன்று டிக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : இந்திய கேப்டன் பதவிக்கு.. இந்த 2 பேர் இனி கனவு காண வேண்டாம் – தினேஷ் கார்த்திக் ஓபன் பேச்சு

இவர் சிஎஸ்கே பணிக்காக மும்பை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தோனி உடன் இணைந்து அணியை வெற்றி பெற வைத்திருப்பார். அப்பொழுது போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பதாகவும், இது தன்னுடைய தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அதன்படியே ஒரு ஆட்டத்தையும் முடித்திருக்கிறார்.

- Advertisement -