கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஒரே நாளில் 17 ஓவர் வீசிய முகமது ஷமி.. சதம் அடித்த ஆர்சிபி கேப்டன்.. துலீப் கோப்பையில் முதல் நாள் நடந்தது என்ன?

2025 ஆம் ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கியது. முதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூருவில் நார்த் சோன் மற்றும் ஈஸ்ட் சோன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணியில் கேப்டன் ரியான் பராக், டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஈஸ்ட் சோன் அணியில் சமி, முகேஷ் குமார் உள்ளிட்ட பவுலர்கள் பங்கேற்றனர். இதில் சமி நீண்ட நாள் காயத்திற்கு பின் திரும்பி இருப்பதால் அவர் எப்படி செயல்பட போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இங்கிலாந்து தொடரிலேயே சமி விளையாட வேண்டியது.

உடல் தகுதியை நிரூபித்த ஷமி:

ஆனால் அவருக்கு ஏற்பட்ட சிறு காயத்தால் அவரை நம்பி தொடரில் முழுமையாக பயன்படுத்த முடியாது என்று கூறி பிசிசிஐ நீக்கி விட்டது. ஆனால் இன்று பந்து வீசிய சமி 17 ஓவர்கள் வீசி வெறும் 55 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். களத்தில் அவர் பந்து வீசி தமது உடல் தகுதியை நிரூபித்து இருக்கின்றார்.

முதலில் பேட்டிங் செய்த நார்த் சோன் அணி 75.2 ஒவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருக்கிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது. நார்த் சோன் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ் தூல் 39 ரன்களும், ஆயுஸ் பதோனி 63 ரன்களும் நிஷாந்த் சிந்து 42 ரன்களும் எடுத்திருக்கின்றன. இதே போன்று பெங்களூரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சென்ட்ரல் சோன் அணியும் நார்த் ஈஸ்ட் அணியும் மோதின.

- Advertisement -

ரஜத் பட்டிதார் சதம்:

இதில் நார்த் ஈஸ்ட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சென்ட்ரல் சோன் அணியில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் அபாரமாக விளையாடி 96 பந்துகளில் 125 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும்,மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

இதையும் படிங்க: இந்தியா பாக் ரெண்டும் ஜெயிக்காது.. ஜெயிக்கிறது பணம்தான்.. ஆசியா கப்ல இவங்க நினைச்சது நடக்கும் – பசித் அலி குற்றச்சாட்டு

மற்றொரு வீரரான டேனிஷ் மேல்வர் 219 பந்துகளில் 198 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் நார்த் சோன் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் எடுத்திருக்கின்றது. இன்றைய நாள் ஆட்டம் தொலைக்காட்சி ஓடிடி என எதிலும் நேரலை செய்யப்படாதது ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கின்றது.

- Advertisement -
Published by

Recent Posts