இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலிப் டிராபி இன்று துவங்குகிறது. இதில் இந்திய கிரிக்கெட்டின் பல நட்சத்திர வீரர்கள் களம் இறங்க இருக்கிறார்கள்.
கடந்த முறை ஏபிசிடி என்று பிரிக்கப்பட்டு தொடர் நடத்தப்பட்டது. இந்த முறை 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கால் இறுதியில் நான்கு அணிகள் களம் இறங்க, மீதி இரண்டு அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெறுகின்றன.
அணிகள் மற்றும் போட்டி அட்டவணை
வடக்கு மண்டல அணிக்கு கில், தெற்கு மண்டல அணிக்கு திலக் வர்மா, மேற்கு மண்டல அணிக்கு சர்துல் தாக்கூர், கிழக்கு மண்டல அணிக்கு ரியான் பராக், வடகிழக்கு மண்டல அணிக்கு ஜோனதன் ராங்சென் மற்றும் மத்திய மண்டல அணிக்கு ரஜத் பட்டி தார் ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்று வடக்கு மற்றும் கிழக்கு மண்டலம், மத்திய மற்றும் வடகிழக்கு மண்டலங்கள் கால் இறுதி போட்டியில் மோதிக் கொள்கின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரை இறுதியில் மேற்கு மற்றும் தெற்கு அணிகளுக்கு எதிராக செப்டம்பர் 4ஆம் தேதி விளையாடும். இதிலிருந்து வெல்லும் இரண்டு அணிகள் செப்டம்பர் 11ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும்.
எந்த டிவியில் பார்க்கலாம்?
தற்போது நடைபெற்று வரும் இந்த தொடரை ஜியோ ஹாட் ஸ்டார் டிவியில் பார்க்கலாம். மேலும் ஆன்லைனிலும் இதே அலை வரிசையில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் அடுத்து இந்தியாவில் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தேர்வாக வாய்ப்புகள் உண்டு.
இதையும் படிங்க : நான் விராட் கோலி பற்றி இதை சொல்வது.. அவருக்கு பிடிக்காமல் போகலாம்.. ஆனா இது வரலாறு – ராகுல் டிராவிட் பேச்சு
இந்திய டெஸ்ட் அணியில் கருண் நாயர் இடம் சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது. எனவே தற்போது மேற்கு மண்டல அணிக்கு விளையாட இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான முறையில் விளையாடினால், மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு அவரால் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






