துலீப் கோப்பை 2025.. சவுத் சோன் அணி 149 ரன்களில் ஆல்அவுட்.. ஜெயின் மீண்டும் அபார பவுலிங்

0
2

துலீப் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் சவுத் சோன் அணி 149 ரன்களில் முதல் இன்னிங்சில்  ஆட்டம் இழந்து உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் டோமஸ்டிக் சீசனில் முதல் தொடராக துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் இறுதிப் போட்டியில் முஹமது அசாருதீன் தலைமையிலான சவுத் சோன் அணியும், ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையிலான சென்ட்ரல் சோன் அணியும் பல பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற சென்ட்ரல் சோன் அணி சவுத் சோன் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.

- Advertisement -

தடுமாறிய பேட்டிங்:

இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் தான்மே அகர்வால் மற்றும் மோகித் காலே ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அதன்பின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. மோகித் காலே ஒன்பது ரன்களிலும் ஆட்டம் இழக்க ரவிச்சந்திரன் சமன் ஒரு ரன்னிலும், ரிக்கிபியூ 15 ரன்களிலும் கேப்டன் முகமது அசாருதீன் நான்கு ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் சவுத் சோன் அணி 65 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் நடுவரிசையில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் 19 பந்துகளை எதிர் கொண்டு 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

- Advertisement -

149 ரன்களில் அல் அவுட்:

அதேபோன்று சல்மான் நிசார் 52 பந்துகளை எதிர் கொண்டு 24 ரன்களிலும் அன்கிட்சர்மா 64 பந்துகளை எதிர் கொண்டு 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேபோன்று சிஎஸ்கே பவுலர் குர்ஜாப்னீத்  இரண்டு ரன்களிலும் நிதிஷ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க சவுத் சோன் அணி 63 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 149 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையும் படிங்க: கன்னத்துல அறையற அபிஷேக்.. எந்த பயிற்சியாளராலும் தடுக்க முடியாது.. காரணம் இதான் – அஜய் ஜடேஜா விளக்கம்

பந்து வீச்சில் சரண் ஜெயின் 49 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று குமார் கார்த்திகேயா 53 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை எடுத்தார்.தற்போது சென்ட்ரல்சோன் அணி 18 புள்ளி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருக்கிறேன்.

- Advertisement -