கன்னத்துல அறையற அபிஷேக்.. எந்த பயிற்சியாளராலும் தடுக்க முடியாது.. காரணம் இதான் – அஜய் ஜடேஜா விளக்கம்

0
125
Jadeja

நேற்று இந்திய டி20 அணிக்கு புதிய துவக்க ஜோடியாக வந்த அபிஷேக் ஷர்மா மற்றும் கில் இருவரும் விளையாடிய விதம் குறித்து அஜய் ஜடேஜா மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் நேற்று 57 ரன்னில் சுருள, இதை துரத்திய இந்திய அணி 4.3 ஓவரில் ஆட்டத்தை முடித்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்து ஆரம்பித்தார். மேலும் அவர் ஆப்சைடில் பெரிய ஷாட் விளையாடுகிறார்.

- Advertisement -

கன்னத்தில் அறைகிறார்

இந்த ஜோடி குடித்து பாராட்டி பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறும்பொழுது “அபிஷேக் ஷர்மா யாரையும் கன்னத்தில் அறைவது போல அடிக்கிறார். அவர்கள் விளையாடுவதை பார்க்கும் பொழுது ஆட்டம் அப்பொழுதுதான் தொடங்குகிறது என்று மக்களுக்கு புரியாது. அவர்கள் தொடங்கும் வேகத்தில் ஆட்டத்தை முடித்து விடுகிறார்கள். அவர் முதல் பந்திலேயே எந்த கண்ணியத்தையும் காட்டவில்லை”

“அபிஷேக் சர்மாவுக்கு என தனி பாணி இருக்கிறது. பெரும்பாலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடிக்கக்கூடியவர்கள் லெக் சைடில் அடிக்கிறார்கள். இவர் சாதாரணமாக ஆப் சைடில் அடிக்கிறார். எல்லா பயிற்சியாளர்களும் பந்துவீச்சாளர்களை ஆப் சைடில் வீசுமாறு கூறுகிறார்கள். ஆனால் இவர் அந்த திசையில்தான் மிகவும் வலிமையானவராக இருக்கிறார்”

- Advertisement -

இந்த ஜோடியின் கனவு

“நான் இந்த இரண்டு நண்பர்களை பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நீங்கள் இளம் வயதில் இருந்து இணைந்து விளையாடும் பொழுது கிளப் கிரிக்கெட்டில் ஒரு பள்ளி அணியை அடித்து நொறுக்குவது போல, அப்படியே தொடர்ந்து வந்து சர்வதேச அணியையும் செய்திருக்கிறார்கள். சிறுவயதில் இருந்து இணைந்து விளையாடுபவர்களுக்கு இருக்கும் கனவு நனவாகி இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து விளையாடும்போது இப்படி நிறைய நடக்கும்”

இதையும் படிங்க : எங்கள் வீரர்கள் இந்தியாவை பார்த்து பயந்து விட்டார்கள்.. உலகச் சாம்பியன்கள் நசுக்கி விட்டார்கள் – யுஏஇ கோச் பேட்டி

“இவர்கள் இருவரும் இது குறித்து கனவு கண்டிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இருவரும் ஒன்றாக வளர்ந்தார்கள், இன்னும் சேர்ந்து நிறைய கிரிக்கெட் விளையாடுவார்கள். அதே சமயத்தில் பவர் பிளே முடிவதற்குள் ஸ்கோரை துரத்தி வென்ற இந்த போட்டியை அவர்கள் மறக்க மாட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -