வீடியோ; டி.ஆர்.எஸ் ; அது தோனி ரிவ்யூ சிஸ்டம் ; சூர்யாவை அட்டகாசமாக அனுப்பி வைத்த தல தோனி!

0
737
Dhoni

பதினாறாவது ஐபிஎல் சீசனில் மிகப்பெரிய போட்டியாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியாக, ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன!

இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மும்பை அணிக்கு வழக்கம் போல ரோஹித் சர்மா மற்றும் இசான் கிஷான் இருவரும் துவக்கம் தர வந்தார்கள்.

- Advertisement -

பெங்களூர் உடனான கடந்த ஆட்டம் போல் இல்லாமல் இந்த ஆட்டத்தில் இவர்களிடமிருந்து ஓரளவுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. ரோஹித் சர்மாவை 21 ரன்னில் துஷார் தேஷ்பாண்டே கிளீன் போல்ட் செய்தார். இஷான் கிஷான் மற்றும் கேமரூன் கிரீன் இருவரையும் ஜடேஜா வழி அனுப்பி வைத்தார்.

இதற்கு நடுவில் சான்ட்னர் பந்துவீச்சை எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் ஸ்வீப் ஆட முயல பந்து சின்ன எட்ஜ் ஆகி மகேந்திர சிங் தோனியின் கைகளில் சிக்கியது. நடுவரிடம் அவுட் அப்பில் கேட்ட பொழுது அவர் தரவில்லை. மகேந்திர சிங் தோனி உடனே மூன்றாவது நடுவரிடம் சென்றார். அவருக்கு பந்து கொஞ்சம் எட்ஜ் ஆனதும் ரொம்ப சரியாகவே தெரிந்திருந்தது. மூன்றாவது நடுவரின் முடிவில் சூரியகுமார் யாதவ் பரிதாபமாக வெளியேறினார்.

டிஆர்எஸ் விஷயத்தில் தோனி எப்பொழுதும் தவறுவதே கிடையாது. அவர் மூன்றாவது நடுவரிடம் சென்றால் அது பெரும்பாலும் அவுட் ஆகத்தான் இருக்கும். அவரது அந்தத் திறமையில் இன்றளவும் மாற்றம் இல்லை. ரசிகர்கள் இந்த டி ஆர் எஸ்-யை தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று சொல்வார்கள். அதற்கேற்றபடி இன்றும் அவரது கணிப்பு பொய்க்கவில்லை. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சென்னை பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாட்டால் மும்பை அணியால் மீளவே முடியவில்லை. 17 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருக்கிறது. சான்ட்னர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 28 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளையும், ஜடேஜா நான்கு ஓவர்கள் பந்து வீசி 20 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்கள்.