“டிராவிட் இரண்டு மணி நேரம் வெயிட் பண்ணி என்கிட்ட ஒரு விஷயம் கேட்டுட்டு போனார்!” – சோயப் மாலிக் வெளியிட்ட மாஸ் சம்பவம்!

0
1034
Dravid

தற்பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் லெஜெண்ட் ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இதற்கு முன்பாக அவர் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராகவும் இருந்தார்.

இந்த நிலையில் சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்ட காரணத்தின் அடிப்படையில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டார். இதை கங்குலியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் ராகுல் டிராவிட் கேப்டன்சி மற்றும் பயிற்சி முறை என்பது உயர்தரத்தை போய் எட்டுவது என்பதாகவே இருந்திருக்கிறது. இதற்காக அவர் தான் கேப்டனாக இருந்த பொழுதும் சரி, பயிற்சியாளராக இருக்கும் பொழுதும் சரி நிறைய பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்பவராக இருக்கிறார்.

தற்போதைய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் சேர்ந்து நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கிறார்கள். மேலும் அவர்களுடைய திட்டம் என்பது எப்பொழுதும் அதிரடியாகவே இருந்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் அணி வட்டத்திற்குள் கொண்டு வரும் வீரர்களை உடனுக்குடன் நீக்குவது கிடையாது. எப்படியாவது அணியுடன் வைத்து அவர்களுக்கான வாய்ப்பைக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் ஆரம்பக்கட்ட பரிசோதனை முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக ராகுல் டிராவிட் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவருக்குத் தேவையான வீரர்கள் அனைவரும் காயம் சரியாகி வந்த பின்பு, தற்பொழுது உலக கோப்பையில் இந்திய அணி வேறு லெவலில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

ராகுல் டிராவிட் பற்றியான ஒரு சிறப்பான சம்பவத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் கூறும் பொழுது “ஒருமுறை நாங்கள் பாகிஸ்தானில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் அதே விமானத்தில் 19 வயது உட்பட்டவர்களுக்கான இந்திய அணி பயணித்தது. ராகுல் டிராவிட் அப்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

அவர் அப்பொழுது என்னிடம் பேச விரும்பி இருக்கிறார். நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் நான் தூங்கி எழுவதற்காக 2 மணி நேரங்கள் காத்திருந்தார். அவர் என்னிடம் பேச விரும்பியது என்னவென்றால், நான் பலமுறை கம்பேக் கொடுத்து பாகிஸ்தான் அணிக்கு திரும்பி வந்திருக்கிறேன். நான் இப்படி தொடர்ச்சியாக திருப்பி வருவதற்கு எனக்குள் எது உத்வேகமாக இருக்கிறது என்று அவர் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏனென்றால் அவர் தன்னுடைய இளம் வீரர்களுக்கு இதன் மூலம் சொல்லிக் கொடுக்க விரும்புகிறார்.

எனவே இதைக் கொண்டு நான் சொல்ல வருவது என்னவென்றால் ராகுல் டிராவிட் இடம் ஈகோ என்பது கிடையாது. அவர் தொடர்ச்சியாக கற்றுக் கொள்ள விரும்புகிறார். கற்றலுக்கு எப்போதும் எல்லையே கிடையாது. அவருடைய வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை கண்டார். என்னிடம் கேட்டார் நான் அவருக்கு என் கதையை சொன்னேன். இப்படியான ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் அவர்கள் அணி எப்படி இருக்கிறது!” என்று பாருங்கள் என்று கூறி இருக்கிறார்!