நேற்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி டி20 போட்டி இலங்கையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 209 ரன்கள் குவித்தது. இதுவரை டி20 கிரிக்கெட்டில் 200 ரன்கள் தாண்டி இலங்கை அணி துரத்தியது கிடையாது என்கின்ற புள்ளிவிபரத்துடன், இலங்கை பேட்டிங் செய்தது.
அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா சிறப்பாக விளையாடி கொடுக்க, லோயர் மிடில் ஆர்டரில் வந்த கவிந்து மெண்டிஸ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் வெற்றிக்காக போராடினார்.
கடைசியில் எதிர்பாராத விதமாக இலங்கை அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மைதானத்தில் இருந்த ரசிகர்களை தாண்டி, இலங்கை அணி வீரர்களையும் மெதுவாக பாதித்துவிட்டது.
காரணம் கடைசி ஓவரில் தலைக்கு பக்கத்தில் வந்த ஒரு புல் டாஸ் பந்துக்கு நடுவர்கள் நோ பால் தரவில்லை. இலங்கை அணி வெறும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்திருந்தது. இதுதான் இலங்கை அணியை மிகவும் பாதிப்படைய வைத்து விட்டது.
இந்த நிலையில் இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா “சர்வதேச போட்டியில் இப்படி எல்லாம் நடக்கவே கூடாது. பந்து இடுப்பு உயரத்திற்கு எடுத்து இருந்தால் பிரச்சனை கிடையாது. ஆனால் பந்து முகத்திற்கு வந்தது. கொஞ்சம் இருந்திருந்தால் பேட்ஸ்மேன் தலையில் பட்டிருக்கும்.
இந்த அளவிற்கு ஒரு பந்து சென்று இருக்கும் பொழுது, அதை ஒரு நடுவரால் பார்க்க முடியாது என்றால், நிச்சயமாக அவரால் சர்வதேச போட்டிக்கு நடுவர் வேலை செய்ய முடியாது. அவர் வேறு வேலைக்கு செல்வதுதான் சரி.
இதையும் படிங்க : “4வது டெஸ்டில் புதுசா யாருக்கும் வாய்ப்பு தர வேண்டாம்.. கோல்டன் சான்ஸ் கிடைச்சிருக்கு” – ஆகாஷ் சோப்ரா பேச்சு
மேலும் இப்படியான நோ-பால்களுக்கு பேட்மேன்களால் அப்பீல் செய்ய முடியாது. ஏற்கனவே இருந்த பழைய விதிமுறையை ஐசிசி மாற்றிவிட்டது. ஆனாலும் எங்கள் பேட்ஸ்மேன்கள் அப்பீல் செய்தார்கள். நடுவர் கிரீஸ் நோ-பால் செக் செய்வது போல, இப்படியான பந்தையும் திரும்ப செக் செய்ய வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.