“உலகக் கோப்பைக்கு பும்ரா வேண்டாம்; இல்லையென்றால் பாகிஸ்தான் நிலைமைதான் இந்தியாவுக்கு ஏற்படும்” – ரவி சாஸ்திரி கடுமையான எச்சரிக்கை!

0
1051
Bumrah

இந்திய அணியின் பந்து வீச்சு படையின் முதுகெலும்பாக இருந்தவர் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ட்ப்ரீத் பும்ரா. இவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக உண்டான காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து தற்பொழுது ஓய்வில் இருந்து வருகிறார்!

சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த செய்தியில் ரிஷப் பண்ட் உலகக் கோப்பைக்கு கிடைத்து விடுவார், அதே சமயத்தில் பும்ரா ஆசியக் கோப்பைக்குள் கிடைத்து விடுவார் என்கின்ற மாதிரியான தகவல்கள் வெளியானது.

- Advertisement -

ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஆகிய முக்கிய தொடர்களுக்கு முன்னால் அணியின் நட்சத்திர வீரர்கள் திரும்பி வருவது இந்திய அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் மிக நல்ல செய்தியாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வேறொரு கோணத்தில் பேசும் பொழுது “இதுதான் கவலையான விஷயம். நீங்கள் பும்ராவை உடல் தகுதியுடன் திரும்பி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவர் முழு உடல் தகுதியோடு இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் மிக மிக முக்கியமான வீரர். நீங்கள் உலகக் கோப்பைக்கு அவரை அவசரப்படுத்துகிறீர்கள். அப்படி செய்தால் பின்பு அவரை நீங்கள் இழப்பீர்கள். டி20 தொடரில் பாகிஸ்தான் ஷாகின் அப்ரிடி இப்படி செய்து இறுதிப்போட்டியில் இழந்தது. பின்பு அவர் நான்கு மாதங்கள் கழித்து அணிக்குள் வந்தார்.

- Advertisement -

நீங்கள் பேராசைக்கும் விளையாடுவதற்கும் இடையே மெல்லியக்கோடு ஒன்றை வரைகிறீர்கள். அதேபோல் சம்பந்தப்பட்டவரும் தன்னைக் குறித்து சிந்திக்க வேண்டும்.
சில நேரங்களில் திரும்ப களத்திற்கு செல்வதற்கு நினைக்கலாம். அது நாம் செய்யும் மிகப்பெரிய பிழையாக மாறலாம்.

இந்திய வேகப்பந்து வீச்சில் சமி மற்றும் சிராஜ் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையில் பெரிய அளவுக்கு வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை கிடையாது. சுழற் பந்துவீச்சாளர்கள்தான் தேவை. அக்சர் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற விரல் சுழற் பந்துவீச்சாளர்களும், சாகல் மற்றும் குல்தீப் போன்ற மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் பிஷ்னோய் கூட இருக்கிறார். பந்துவீச்சில் தேவையான அளவுக்கு ஆழம் இருக்கிறது இது போதும்.

ஹர்திக் பாண்டியா உடல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தாங்காது. ரோகித் சர்மாவுக்கு பிறகு அவர் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு கேப்டனாக வந்துவிடுவார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!