இந்த வாய்ப்பை தீபக் ஹூடாவுக்கு தராமல் தூக்கி விடாதீர்கள் – தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்!

0
222
DK

புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் இந்திய அணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டவுடன், பேட்டிங் மேல் வரிசையில் இருந்து பந்து வீசக்கூடிய வகையில் ஒரு வீரர் தேவை என்பதற்காக அணிக்குள் கொண்டுவரப்பட்டவர்தான் தீபக் ஹூடா!

வலது கை பேட்டிங் மற்றும் வலது கை ஆப் ஸ்பின் வீசக்கூடிய இவர் அணிக்கு ஆறாவது பந்துவீச்சாளராக செயல்படக்கூடிய அளவில் இருப்பவர். அணிக்குள் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் பந்து வீச சில வாய்ப்புகளையும் பெற்று அதில் குறிப்பிடத் தகுந்த வகையில் பந்தை வீசியும் இருந்தார்!

- Advertisement -

மேலும் கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டராக இடம் பெற்ற இவர் ஆடும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கவில்லை.

இது மட்டும் அல்லாமல் கடந்த வருடம் ஐபிஎல் முடிந்து அயர்லாந்து டி20 தொடரில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்த இவர் சதம் அடித்து அசத்தியிருந்தார். ஆனால் விராட் கோலியின் மறு வருகைக்குப் பின் இவருக்கு அணியில் கடைசி வரிசையில்தான் பேட்டிங்கில் இடம் கிடைத்தது. அங்கு விளையாடி பழக்கப்படாத இவரால் சரியாக ஜொலிக்க முடியவில்லை. தற்போது வரை தொடர்ந்து கீழேயே இடம் கிடைப்பதால் இந்த நிலையே நிலவி வருகிறது.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” நிச்சயமாக தீபக் நம்பர் ஆறில் பேட்டிங் செய்வார். அவர் அந்த இடத்தில் பேட்டிங் செய்யும்பொழுது தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தால் அதைக் காரணமாக கொண்டு அவரை விட்டு அணி நிர்வாகம் விலக முடிவு செய்யக்கூடாது. அவர் நம்பர் மூன்றில் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனவே அவருக்கு அந்த இடத்தில் மீண்டும் வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்!

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர்
” நீங்கள் நம்பர் ஆறில் விளையாடும் பொழுது 8 அல்லது 10 பந்துகளை சந்தித்தாலும் அதை மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வந்தே ஆக வேண்டும். இது மிகவும் அழுத்தம் நிறைந்த இடம். ஆனால் தீபக் ஒரு மிடில் வரிசை பேட்ஸ்மேன். அவருக்கு நம்பர் மூன்றில் வாய்ப்பு தரும் பொழுது அவரால் சரியாக விளையாடி ஆட்டத்தில் தாக்கத்தை உருவாக்க முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்!