80,86,87.. சதம் இல்லாமல் 436 ரன்கள்.. இந்தியா வலிமையான முன்னிலை.. இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

0
158
ICT

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தற்பொழுது இங்கிலாந்து இந்திய அணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பாக இருந்து ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் மோதி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க, 246 ரன்கள் மட்டும் முதல் இன்னிங்சில் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கி விளையாடிய பொழுது, முதல் நாளில் 23 ஓவர்களை சந்தித்து விளையாடியது. அந்த 23 ஓவர்களில் ஜெய்ஸ்வால் 70 பந்துகளை சந்தித்து 76 ரன்கள் அதிரடியாக குவித்தார்.

நேற்று இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாட வந்த அவர் 80 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கீழ் 23, ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய கேஎல் ராகுல் 86 ரன்களில் ஆட்டம் இழந்தார். கே எஸ் பரத் 41, அஸ்வின் 1 என ஆட்டம் இழக்க, இன்று மூன்றாவது நாள் விளையாட வந்த ரவீந்திர ஜடேஜா 87 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவராலும் இந்த ஆடுகளத்தில் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.

அடுத்து வந்த பும்ரா முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இந்த இரண்டு விக்கட்டையும் அடுத்தடுத்து ஜோ ரூட் வீழ்த்தினார். இதற்கு அடுத்து ரேகா அஹமத் வீசிய ஓவரில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் படேல் ஆட்டம் இழந்தார். இந்திய அணி எந்த வீரரும் சதம் அடிக்காமல் 436 ரன்கள் சேர்த்து இருக்கிறது. தற்பொழுது இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : “7 வாரங்கள்.. 5 டெஸ்ட் போட்டிகள்.. இந்தியாகிட்ட சிக்கிட்டீங்க.. இனி சோதனைதான்” – மோர்கன் வெளிப்படையான பேச்சு

சுழற் பந்துவீச்சுக்கு மூன்றாவது நாளில் அதிக சாதகங்கள் இருக்கும் என்பதால், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா என்று பார்க்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் இந்தியா 400 ரன்கள் தாண்டி விட்ட காரணத்தினால், இங்கிலீஷ் கிரிக்கெட்டர்களால் ஆடுகளத்தை குறையும் சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் டாம் ஹார்ட்லி மற்றும் ரேகான் அஹமத் இருவரும் பல இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -