ஐபிஎல் 2024

நாளை சிஎஸ்கேவை நிச்சயம் தோற்கடிப்போம்.. ஏற்கனவே பிளே ஆஃப்க்கு வந்திருக்கனும் – ராஜஸ்தான் டோனவன் பெரீரா பேச்சு

நடப்பு ஐபிஎல் 17வது சீசனில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் நாளை மதியம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான அணி விளையாடுகிறது. இந்த போட்டி குறித்து அந்த அணியின் ஆல் ரவுண்டர் டோனவன் பெரீரா பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் சிறப்பாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியை விளையாடி, ஏழு போட்டியில் ஒரு போட்டியை மட்டுமே தோற்றது. ஏறக்குறைய முதல் பாதியிலேயே பிளே ஆப் வாய்ப்பை மிகவும் உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் மேற்கொண்டு விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளை தொடர்ந்து தோற்று இரண்டு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்போது இரண்டு தொடர் தோல்விகளுக்கு அடுத்து மீண்டு வர வேண்டிய அவசியம் அந்த அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நாளை மதியம் நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு, முதல் இரண்டு இடத்தில் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும்.

- Advertisement -

இந்தப் போட்டி குறித்து ராஜஸ்தான் அணியின் டோனவன் பெரீரா கூறும்பொழுது “நாங்கள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் ஒரு நீண்ட தொடர். எனவே நீங்கள் இரண்டாம் பகுதியில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். முதல் பாதியில் பெரும்பாலான ஆட்டங்களை வென்றதன் மூலம் நாங்கள் சிறப்பாக ஆரம்பித்தோம். எங்களிடம் மூன்று ஆட்டங்கள் இருந்தபோதிலும் நாளைய போட்டி முக்கியமானது. நாங்கள் அதையெல்லாம் எடுத்துக் கொண்டு எங்கள் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.

இதையும் படிங்க : 41 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு.. உருக்கமான அறிக்கை.. லார்ட்ஸில் நடக்க இருக்கும் நிகழ்வு

இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் அது நாங்கள் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். சிஎஸ்கே அணி நல்ல அணி என்று எங்களுக்கு தெரியும். சில போட்டிகள் எங்களுக்கும் நெருக்கமாக இருந்தது.போட்டியில் சிறிய வித்தியாசங்கள் எந்த வழியிலும் செல்லலாம். எங்கள் பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடுவதின் மூலமாக நாளை நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Published by