“எம்.எஸ் தோனி இந்த வருட ஐபிஎல் உடன் ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறீர்களா? -; ஷேன் வாட்சன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான பதில்

0
31

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆன எம் எஸ் தோனிக்கு இது தான் கடைசி ஐபிஎல் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்ற வருட ஐபிஎல் போட்டியின் போது கூட சென்னையில் விளையாடிய பிறகு தான் ஓய்வு பெறுவேன் என அறிவித்திருந்தார் தோனி.

- Advertisement -

தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் சென்னைக்கு திரும்பி இருப்பதால் இந்த ஐபிஎல் தொடருடன் எம் எஸ் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . டி எஸ் கே அணிக்கு மீண்டும் ஒரு கோப்பையை கைப்பற்றி கொடுத்துவிட்டு எம் எஸ் தோனி ஐபிஎல் இல் இருந்து ஓய்வு பெறுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டருமான ஷேன் வாட்சன் எம் எஸ் தோனியின் எதிர்காலம் பற்றி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த வருட ஐபிஎல் உடன் எம் எஸ் தோனி ஓய்வு பெறுவார் என நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேசிய அவர் “இது எம் எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் என்று நான் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. அவர் இன்னும் மூன்று அல்லது நான்கு ஐபிஎல் தொடர்களில் விளையாடுவார். அவரது உணர்த்தகுதி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் எம் எஸ் தோனியின் கேப்டன்சி பற்றி தொடர்ந்து பேசிய அவர் “தோனியின் ஆட்டத்தைப் போலவே அவரது தலைமை பண்பும் சிறப்பான ஒன்று. ஆட்டத்தின் போக்கை கணிப்பது அவரை ஒரு நல்ல தலைவராக்குகிறது.. மைதானத்தில் ஆட்டத்தின் யுக்திகளை அமைப்பதில் அவரது திறமை அபாரமானது. சிஎஸ்கே வின் வெற்றிகளில் இவரது பங்கு மிக முக்கியமானது” என தெரிவித்தார்.