847 விக்கெட் எடுத்த பிராடுக்கு பிடிச்ச பவுலர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுத்திய பிராட்!

0
388
Broad

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட உலகப் புகழ்பெற்ற டெஸ்ட் தொடரான ஆசஸ் தொடரின் கடைசி போட்டியோடு வெற்றிகரமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெற்றார்!

இவர் சக அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சனுடன் இணைந்து 1037 விக்கட்டுகள் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜோடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் தம் பெயரை இணைத்த ஒரு சாதனை வீரர்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர் இவரை மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளராக கூறி இருப்பதிலிருந்து இவரது உயரம் எவ்வளவு என்று புரிந்து கொள்ளலாம். பந்தை ஒரே மாதிரி வீசி இரண்டு பக்கங்களிலும் திருப்பும் வல்லமை பெற்றவர்.

இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 847 சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 167 போட்டிகளில் 604 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஆண்டர்சனுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருக்கிறார்.

இவர் தனக்கு சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் பிடித்த வேகப்பந்துவீச்சாளராக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என திறமையான வேகப்பந்துவீச்சாளர்களை வைத்திருந்த நாடுகளை விட்டு, ஒரு ஆசிய நாட்டை சேர்ந்த அதுவும் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் மிகவும் இளைஞரான ஒரு வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுத்திருக்கிறார். இவருக்கு பிடித்த வேகப்பந்துவீச்சாளர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷாகின் ஷா அப்ரிடி!

- Advertisement -

இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறும் பொழுது ” கிரிக்கெட் உலகில் ஷாகின் ஷா அப்ரிடி நான் பார்க்க விரும்பும் பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவர் மைதானத்தில் பந்து வீச ஓடி வரும் பொழுது மிகப்பெரிய பிரசன்ஸ் இருக்கிறது. மேலும் பந்துவீச்சாளர்கள் ஆற்றல் மற்றும் துடிப்புடன் ஓடி வருவதை நான் விரும்புகிறேன்.

வேகப்பந்துவீச்சில் எனக்கு இயல்பான திறமை இருந்தது. இவரும் அப்படி இயல்பான திறமையோடு இருக்கிறார். இவர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த கோடை காலத்தில் நாட்ஸ் அவுட்லாக்கை பிரதிநிதித்துவப்படுத்தினார். இது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது.
மேலும் அவர் சிறப்பாக செயல்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.