“விராட் கோலி நிச்சயமாக அதை செய்திருப்பார்” – ரோகித் சர்மாவின் தவறை சுட்டிக்காட்டிய தினேஷ் கார்த்திக்!

0
1074

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டி தற்போது இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 327 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது .

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய பணிந்தது . தொடக்கத்தில் 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் ஸ்மித் மற்றும் டிராவஸ் ஹெட் மிகச் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியா அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர் . நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஹெட் 127 ரன்களுடனும் ஸ்மித் தொன்னுத்தி ஐந்து ரன்கள்டனும் களத்தில் இருந்தனர் .

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினாலும் இந்திய அணியின் பந்து வீச்சு சுமாராகவே இருந்தது . துவக்கத்தில் நன்றாக பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உணவு இடைவேளைக்குப் பிறகு அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தனர் . இது ஆஸ்திரேலியா வீரர்கள் எளிதாக ரன் குவிக்க வாய்ப்பாக அமைந்தது .

ஒரு முனையில் ஸ்டீவன் ஸ்மித் நிலையாக நின்று ஆட மறுமுனையில் அதிரடியாக ஆடிய ட்ராவஸ் ஹெட் அபாரமாக அடி தனது சதத்தை நிறைவு செய்தார் . அதிகப்படியாக அழுத்தம் இல்லாமல் இந்திய அணியினர் பந்து வீசியதும் ஆஸ்திரேலியா அணியினர் ரன் குவிக்க வாய்ப்பாக அமைந்தது . நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன்ஷிப் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இந்தியாவின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.

தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவர் நேற்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார் . இது போன்ற கடினமான நேரங்களில் விராட் கோலி எவ்வாறு செயல்பட்டு வீரர்களை ஊக்குவிப்பார் என்பது பற்றி அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார் .

- Advertisement -

இது குறித்து தனது கருத்தை பகிர்ந்து இருக்கும் தினேஷ் கார்த்திக் ” விராட் கோலி போன்ற ஒரு கேப்டனை இது போன்ற சமயங்களில் நாம் மிகவும் மிஸ் செய்கிறோம் . இக்கட்டான சூழ்நிலையில் அணி வீரர்களை ஊக்குவித்து அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவதில் விராட் கோலி கைதேர்ந்தவர் . இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நாம் கண்டிருக்கிறோம் விராட் கோலி அணி வீரர்களை எவ்வாறு உற்சாகப்படுத்தி அவர்களிடம் இருந்து திறமையை வெளிக் கொண்டு வருவார்” என தெரிவித்தார் தினேஷ் கார்த்திக் .