இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரின் நான்காவது போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணியும் மோதின.
இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
ஜோத்பூரில் நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற தவான் தலைமையில் ஆன குஜராத் கிரேட்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் செய்ய களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் சத்துருங்கா டி செல்வா சிறப்பாக விளையாடிய 28 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர் என 53 ரன்கள் குவித்தார்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 ரன்களும், மார்ட்டின் கப்தில் 22 ரன்களும் குவித்தனர். இதில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மனன் சர்மா நான்கு ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் அணி தடுமாறி ஆட்டமிழந்து வெளியேறியது.
தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேலை தவிர வரிசையாக மூன்று பேட்ஸ்மேன்களும் (கப்தில் மசகட்சா மற்றும் கேதார் ஜாதவ்) ஆகியோர் மனன் ஷர்மாவின் பந்துவீச்சில் வெளியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வான்விக் 15 ரன்கள் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் தவான் ஒரு முனையில் சிறப்பாக விளையாட, மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்கள். இதில் சிகார் தவான் மட்டும் 48 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு சௌத்தர்ன் அணியின் சிறப்பான பந்து வீச்சால் குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க : பங்களாதேஷ் 2வது டெஸ்ட்.. வேகம் சுழல் இரண்டும் இல்லை.. வித்தியாசமான ஆடுகளம் – வெளியான தகவல்கள்
இதில் பந்துவீச்சில் பவான் நெகி சிறப்பாக வீசி நான்கு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.