ரிஷப் பண்ட் இல்லாமல் தினேஷ் கார்த்திக் இருப்பது கேலிக்குரியது – ஆஸ்திரேலியா லெஜன்ட் வீரர் தாக்கு!

0
4458
DK

இந்திய அணியில் யாருக்கு பதிலாக யார் இடம் பெறுகிறார்களோ, அவர்கள் அதற்குரிய வகையில் விளையாடாமல் பிரச்சனையாவது தற்பொழுது வாடிக்கையாக இருந்து வருகிறது!

தினேஷ் கார்த்திக் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஃபினிஷர் இடத்தில் மிகச் சிறப்பாக பெங்களூர் அணிக்கு விளையாடி இருந்தார். குறிப்பாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 180க்கு மேல் இருந்தது.

- Advertisement -

இதே சமயத்தில் இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்குமான முதல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட் வடிவத்தில் தினறி வந்தார். ஐபிஎல் தொடரில் இந்த வருடத்தில் ரிஷப் பண்டின் செயல்பாடு சிறப்பாகவும் இல்லை.

மேலும் இந்திய அணியில் தற்பொழுது பினிஷிங் ரோல் செய்வதற்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. இந்த காரணத்தால் ரிஷப் பண்ட்டை வெளியில் வைத்து தினேஷ் கார்த்திக்கை விளையாட வைக்கிறார்கள். ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தால் அவரைக் குறைந்தபட்சம் ஹர்திக் பாண்டியா விளையாடும் இடத்தில்தான் ஆட வைக்க முடியும், அதற்கு கீழே ஆட வைப்பது வீண். அதே சமயத்தில் அதற்கு மேலே எந்த இடத்திலும் விளையாட வைக்க முடியாது. அந்தந்த இடத்திற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நியாயப்படுத்தும் விதமாக இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் விமர்சனத்திற்கு உரிய முறையில் ஆட்டமிழந்து, ரிஷப் பண்ட் மீண்டும் விளையாடும் அணிக்குள் வரவேண்டும் என்ற கருத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது ஆஸ்திரேலியாவின் லெஜெண்ட் வீரர் மற்றும் கேப்டன் கிரேக் சாப்பல் கூறும் பொழுது ” சர்வதேச அளவில் டிம் டேவிட் என்ன செய்தார்? சில நேரங்களில் தேர்வாளர்கள் ஒரு வீரர் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதை வைத்து தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ரிஷப் பணத்தை வெளியில் வைத்து தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்கிறார்கள். இது கேள்விக்குரியது. அதாவது ரிஷப் பண்ட் ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் டிம் டேவிட்காகக் காத்திருக்கிறேன். இந்த உலகக்கோப்பைக்குப் பிறகு அவரைச் சில சர்வதேச போட்டிகளில் விளையாடுவோம். அதில் அவர் எப்படிச் செயல்படுகிறார் என்று பார்க்க வேண்டும். சராசரியாக 120 கிலோமீட்டர் வேகத்திற்கு நன்றாக விளையாடுபவர்களை விட்டு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு நன்றாக விளையாடக் கூடியவர்களை பார்க்க வேண்டும். ஏனென்றால் அப்படி விளையாடுவதுதான் கடினமானது” என்று கூறியுள்ளார்!