அஸ்வின் இடத்துக்கு 3 பேர் இருக்காங்க.. ஆனா இந்தப் பையனுக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு – தினேஷ் கார்த்திக் கணிப்பு

0
31
Ashwin

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் மிக முக்கியமான சுழல் பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது வீரராக இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜாவுக்கு 35 வயதாக, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தற்பொழுது 37 வயதாகிறது. எனவே தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்று வீரரை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருக்கிறது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை விளையாட ரவிச்சந்திரன் அஸ்வின் போல ஒரு சிறந்த ஆப் ஸ்பின்னர் தேவை.

- Advertisement -

ஆப் ஸ்பின்னர் அவசியம்

தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கு அவரைப் போலவே பேட்டிங்கும் செய்யக்கூடிய இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் கிடைத்திருக்கிறார். அதே சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்னும் தேடல் நடந்து கொண்டிருக்கிறது. எனவே கூடிய விரைவில் அதை கண்டறிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதுகுறித்து முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் எம்.வெங்கடரமணன் கூறும்பொழுது “எந்த ஒரு ஸ்பின்னரும் குறிப்பிட்ட நாளில் ரன்கள் கொடுக்கவே செய்வார்கள். மேலும் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடுவது பேட்ஸ்மேன்களுக்கு சுலபமானது. ஏனென்றால் நிறைய பேட்ஸ்மேன்கள் லெக் சைட் கவ் கார்னர் திசையில் அடிப்பதில் இயல்பான திறமையுடன் இருப்பார்கள். இந்த பக்கத்தில் ஆப் ஸ்பின்னர்களை வெகு எளிதாக அடிக்கலாம். எனவே ஆப் ஸ்பின்னர்களை கண்டறிவது சவாலான ஒன்று” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மூன்று ஆப் ஸ்பின்னர்கள்

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி இந்திய ஏ அணியின் தொடரில் புல்கித் நரங், சரண்ஷ் ஜெயின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என மூன்று ஆப் ஸ்பின்னர்களை விளையாடி பரிசோதித்தது. நிச்சயமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அடுத்த கட்டத்திற்கான ஆப் ஸ்பின்னர்களை தேடுவது தெரிகிறது.

இதையும் படிங்க : 565 ரன்.. பங்களாதேஷ் பிரம்மாண்ட ரன் குவிப்பு.. பாகிஸ்தான் தார் ரோடு பிட்ச்.. ரசிகர்கள் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இப்பொழுது தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அடுத்து யார் என்பதில் வாஷிங்டன் சுந்தர்தான் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு கிடைத்த குறைந்த வாய்ப்பில் அவர் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். இந்திய அணி நிர்வாகம் வேறு யாரிடமும் செல்வதற்கு முன்பாக வாஷிங்டன் சுந்தர் வாய்ப்புகளை பெறுவார்” என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -