தற்போது பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் நாட்டில் அந்த அணிக்கு எதிராக ராவல்பிண்டி மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில்விளையாடி வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ரன் குவித்ததற்கு பங்களாதேஷ் அணி திருப்பி பதிலடி கொடுத்திருக்கிறது.
மேலும் இந்த தொடருக்கு ஏற்கனவே அணியில் இருந்த பிரதான சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது ஷாகி ன் அப்ரிடி வருகைக்காக நீக்கப்பட்டது தற்பொழுது பெரிய சர்ச்சையையும் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் வ
பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஒத்துழைப்பையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக், கேப்டன் ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் மூவரும் 16 ரன்களில் வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து இளம் தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் அரைசதம் அடித்தார்.
மேற்கொண்டு பாகிஸ்தான அணியின் துணை கேப்டன் சவுத் ஷகீல் 261 பந்துகளில் 141 ரன்கள், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 239 பந்துகளில் 171* ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை மீட்டார்கள். பாகிஸ்தான அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்திருந்தபோது பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் இன்னிங்ஸை டிக்ளர் செய்தார்.
பங்களாதேஷ் அணியின் பதிலடி
இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சத்மன் இஸ்லாம் 91, முன்னாள் கேப்டன் மொமினுல் ஹக் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து, 249 ரன்கள் பாகிஸ்தான் அணியை விட பின்தங்கி இருந்தது.
இப்படியான நிலையில் அபாரமாக விளையாடிய முஷ்பிக்யூர் ரஹீம் இன்று சதம் அடித்தவுடன் அதை பெரியதாக மாற்றி 191 ரன்கள் குவித்தார். இவருக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்த லிட்டன் தாஸ் 56 ரன்கள் மற்றும் மெகதி ஹசன் மிராஸ் 77 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் அணி 167.3 ஓவர்கள் விளையாடி 565 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியை விட 117 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படிங்க : 40 வருட சாதனை.. இலங்கை கமிந்து மெண்டிஸ் ரெக்கார்ட் செஞ்சுரி.. இங்கிலாந்து அணி திணறல்
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்களுக்கு அயூப் விக்கெட்டை இழந்து 27 ரன்கள் எடுத்திருக்கிறது. தார் ரோடு போல இருக்கும் ஆடுகளத்தில் குறைந்தபட்சம் சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது இருந்திருக்க வேண்டும் எனவும், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் பொழுது இப்படியான ஆடுகளத்தை அமைப்பது சரியானது இல்லை என்றும் பெரிய விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது.