இந்திய டி20 அணியில் தொடக்க வீரருக்கான இடத்தை சஞ்சு சாம்சன் தற்போது ஏறக்குறைய உறுதி செய்து இருக்கிறார் என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
மேலும் சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் தன்னுடைய பேட்டிங் டெக்னிக்கையும் தற்பொழுது மாற்றிக் கொண்டிருப்பதாகவும், அவரிடம் சிறந்த ஒரு திறமை இருக்கின்ற காரணத்தினால், அவர் மிக சிறப்பானவராக இருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் பாராட்டி கூறியிருக்கிறார்.
சாம்சனால் கில்லுக்கு வந்த பிரச்சனை
தற்பொழுது இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கு கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எதிர்கால இந்திய கேப்டனாகவும் பார்க்கிறது. இதன் காரணமாகவே ருதுராஜை வெளியில் தள்ளி இந்திய டி20 அணியில் கில்லை துவக்க ஆட்டக்காரராக கொண்டு வந்தார்கள்.
இப்படியான நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இன்னொரு துவக்க வீரருக்கான இடத்தில் ஜெய்ஸ்வால் மிக உறுதியாக இருப்பார். தற்போது சஞ்சு சாம்சனின் பேட்டிங் எழுச்சி கில்லுக்கு இந்திய டி20 பிளேயிங் லெவலில் இடம் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம்.
பேட்டிங் டெக்னிக்கை மாற்றிய சஞ்சு சாம்சன்
இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “தினேஷ் கார்த்திக் இந்திய டி20 அணியில் தொடக்க வீரருக்கான இடத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரும் ஜெய்ஸ்வாலும் சில காலம் இந்திய டி20 அணியின் தொடக்க வீரர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.டி20 கிரிக்கெட் வடிவமைப்புக்கு ஏற்றார் போல சாம்சன் பேட்டிங் டெக்னிக்கை மாற்றி இருக்கிறார். கேசவ் மகாராஜுக்கு எதிராக சிக்சர் அடிக்க ஆர்வம் காட்டினார். இறங்கி வந்த பொழுது அவர் லென்த்தையும் தவறவிட்டார்”
இதையும் படிங்க : அஸ்வினை விட லயன்தான் சிறந்த ஸ்பின்னர்.. அவர்கிட்ட இந்த விஷயம் பெருசா இருக்கு – பால் ஆடம்ஸ் கணிப்பு
“கேசவ் மகாராஜ் புத்திசாலித்தனமாக லென்த்தை இறுக்கிப்பிடித்தார். சாம்சன் லென்த்தை தவறவிட்டிருந்த போதும் கூட, கேசவ் மகாராஜ் பந்தை காற்றில் வைத்து தன்னை ஏமாற்ற நினைத்தபொழுது, தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்து, தனக்கு இருக்கும் மிகச் சிறப்பான பேட்டிங் டைமிங் மூலம் அதை சிக்ஸராக அடித்தார். சிலருக்குதான் இப்படியான டைமிங் இருக்கும். இந்தத் திறமை அவரை சிறப்பானவராக மாற்றுகிறது” என்று கூறி இருக்கிறார்.