கேஎல் ராகுல் மீது இதனாலதான் கோபமடைந்தேன்.. அவர் ரொம்ப நேர்மையான மனிதர் – லக்னோ அணி உரிமையாளர் பேட்டி

0
110
KL Rahul IPL

18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்தது. இதில் குறிப்பாக லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுலை லக்னோ அணி விடுவித்த நிலையில் அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கிக் கொண்டது.

இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுல் உடனான உறவு குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேஎல் ராகுலை வாங்கிய டெல்லி அணி

கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் என ஓரளவு தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழ்நிலையில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான குறிப்பிட்ட போட்டியில் லக்னோ அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணி கேஎல் ராகுலை தக்க வைக்காத நிலையில் அவரை விடுவித்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தது. எனவே கேஎல் ராகுலை இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்து தங்கள் அணியை வலுவாக்கிக் கொண்டது. இந்த சூழ்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு அந்த தருணம் குறித்து பேசிய லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அது உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே எனவும், இதனால் தனக்கும் ராகுலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கேஎல் ராகுல் குறித்து லக்னோ அணி உரிமையாளர்

இதுகுறித்து அவர் கூறும்போது “உங்களுக்கு உணர்வுகள் இருக்கும் தருணங்கள் நிச்சயமாக இருக்கும். அந்த உணர்வுக்கு ஒரு வெளிப்பாடு இருக்கிறது. ஆனால் அது எந்த உறவையும் நிச்சயமாக பாதிக்காது. அல்லது உறவை பாதிக்க கூடாது. கேஎல் ராகுல் மீது எனக்கு அன்பு மற்றும் மரியாதை நிறைய இருக்கிறது. கேஎல் ராகுல் எனது குடும்பமாக இருக்கிறார். இனியும் அப்படியே இருப்பார் கடந்த மூன்று ஆண்டுகளாக லக்னோ அணியின் கேப்டனாக சிறந்த முடிவுகளை காட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க : கோலி உறுதியா இந்த முடிவு எடுக்கணும்.. சச்சினை இதுல முன்மாதிரியா வைத்து ஆடுங்க – சுனில் கவாஸ்கர் பேட்டி

என்ன நடந்தாலும் அவருடைய நன்மையை நான் உண்மையாகவே விரும்புகிறேன். அவர் மிகவும் நேர்மையான நபர் அவரைப் போன்ற நபருக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் மிகவும் திறமையான மனிதர், மேலும் அவரது திறமையை இந்த உலகிற்கு வெளி காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -