ரோகித் மனசுல எரிகிற தீ என்னனு எனக்கு தெரியும்.. கவிதை மாதிரி அதை பண்ணுவாரு – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
32
Rohit

இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் பணமாக என்ன விஷயம் இருக்கிறது என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

ஐபிஎல் தொடருக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். அதே சமயத்தில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டும் இருக்கிறார்.

- Advertisement -

அந்த நெருப்பு எரிகிறது

இந்த நிலையில் ரோஹித் சர்மா தற்பொழுது கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும் அவருடைய கனவு இன்னும் தொடர்வதாகவும், இதற்காக அவர் துவக்க ஆட்டக்காரராக என்ன செய்ய போகிறார்? என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்பது ரோஹித் சர்மாவின் கனவாக இருந்தது. தற்போதும் அந்த நெருப்பு அவர் மனதில் எரிந்து கொண்டிருக்கிறது”

- Advertisement -

அவருடைய வேலை இதுதான்

“ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். அவர் நல்ல பேட்டிங் பார்மில் இருக்கும் பொழுது, அவர் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு ஒரு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொழுது, ஒரு முற்றிலுமாக ஒரு கவிதையான இயக்கத்தில் விளையாடக் கூடியவர்”.

இதையும் படிங்க : ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது.. 2 இந்தியர்கள் வென்று சாதனை.. விவரம்

“அவர் இனி சாதனைகளுக்காக விளையாட போவது கிடையாது. அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இந்திய அணிக்கு நல்ல ஒரு தொனியையும் துவக்கத்தையும் ஏற்படுத்துவதுதான் அவருடைய நோக்கம். அவர் மிகவும் தன் நலமற்று அணிக்காக விளையாடுவார். இது புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய வகையில் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -