இந்திய கிரிக்கெட்

சிட்னியில் ரோகித் பேட்டி கொடுத்த காரணமே இதுதான்.. இப்ப அவர் இதை செஞ்சே ஆகணும் – தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விலகி சிட்னியில் வைத்து பேட்டி அளிப்பதற்கான காரணம் குறித்து தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அணியின் நலனுக்காக தான் விளையாடவில்லை என தெரிவித்திருந்தார். மேலும் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும், இந்த முடிவு அணிக்காக எடுக்கப்பட்ட தற்காலிகமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

ரோகித் சர்மா விஷயத்தில் நிலவும் குழப்பம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வருவாரா? இது மட்டும் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்பது குறித்து பல சந்தேகங்கள் கேள்விகள் நிலவிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா சிட்னியில் பேட்டி அளித்ததற்கான முக்கிய காரணம் என்னவென்றும், அவர் இடையில் இருக்கும் இந்த இரண்டு வார காலத்தில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும், அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கு திரும்பி வருவாரா? என்பது குறித்தும் தினேஷ் கார்த்திக் விரிவாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா இந்த முடிவெடுக்க வேண்டும்

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ரோகித் சர்மா அடுத்து இந்தியாவில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்களிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் நிச்சயம் இந்திய அணியில் இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர் தன்னுடைய பார்மை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் விளையாட முடியும் என்று நம்புவார். அவரைச் சுற்றி நிறைய விஷயங்கள் உலவிக் கொண்டிருந்த காரணத்தினால், பொதுமக்களை அமைதிப்படுத்துவதற்காக சிட்னியில் பேட்டி தந்தார்”

இதையும் படிங்க : பும்ராவின் காயம் எப்படி ஆனது.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடுவாரா? – வெளியான முக்கிய புதிய தகவல்கள்

“ஆஸ்திரேலிய தொடருக்கு வருவதற்கு முன்னால் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்திருந்தது. எனவே அவர் தற்போது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவார். இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இருக்கும் இரண்டு வார ஓய்வு காலத்தில் அவர் சில முக்கிய முடிவுகளை குடும்பத்துடன் ஆலோசித்து எடுக்கலாம். தனிப்பட்ட முறையில் அவருக்காகவும் இந்திய அணிக்காகவும் அவர் சிந்திக்க வேண்டும். சிட்னியில் அவர் பேட்டி தந்தது மீடியாக்களையும் பொதுமக்களையும் அமைதிப்படுத்த உதவிய நல்ல விஷயம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts