தோனிக்கு நான் அப்படி செஞ்சது தப்புதான்.. நிஜமாவே இதை நான் மறந்துட்டேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
164

இந்திய அணியில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது கிரிக்கெட் தொடர்களில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆலோசகராக செயல்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்வுக்காக தினேஷ் கார்த்திக் ரசிகர்களிடம் தனது வருத்தத்தினை தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஓய்வு பெற்ற பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது தான் விளையாடிய காலகட்டத்திலோ அல்லது இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒரு தொகுப்பை எடுத்து தனது ஆல்டைம் சிறந்த பிளேயிங் லெவன் அணியை அறிவிப்பார்கள். அதுபோலவே தினேஷ் கார்த்திக் கடந்த வாரம் இந்திய வீரர்களில் தனது ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவன் அணியை வெளியிட்டார்.

இதில் குறிப்பிடத்தக்க விதமாக இந்திய அணியின் மகத்தான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பட்டியலில் ராகுல் டிராவிட் இடம் பெற்று இருந்தார். மேலும் முதன்மை விக்கெட் கீப்பரும் இல்லாததால் தினேஷ் கார்த்திக் பகுதி நேர விக்கெட் கீப்பரோடு செல்ல முடிவெடுத்து விட்டாரா? என்று ரசிகர்கள் குழம்பினர்.

- Advertisement -

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் கூறும் போது “நண்பர்களே நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். உண்மையாகவே அது தவறுதான். பிளேயிங் லெவன் வெளியான பிறகு தான் எனக்கு தெரிந்தது. இந்த ப்ளெயின் லெவனை வடிவமைக்கும் போது நான் நிஜமாகவே விக்கெட் கீப்பரை மறந்து விட்டேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக ராகுல் டிராவிட் கீப்பராக அங்கு இருந்தார். அப்போதும் நான் பகுதி நேர கீப்பருடன் செல்கிறேன் என்று நினைத்தார்கள்.

விக்கெட் கீப்பராக இருக்கும் நானே ஒரு விக்கெட் கீப்பரை மறந்து விட்டேன் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? தெளிவாக என்னை பொறுத்தவரை கூறுகிறேன். தல தோனியை எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் புகுத்தலாம். இதுவரை விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் தோனி மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை நான் உணர்கிறேன். எனது அணியை நான் மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தல தோனியை ஏழாம் இடத்தில் புகுத்துவேன்.

இதையும் படிங்க:69 வருட ரெக்கார்டு.. ரிஸ்வானின் வரலாற்று சாதனையை தடுத்த.. கேப்டன் பயிற்சியாளர்.. தவறு யார் மீது?

மேலும் அந்த அணியில் தோனிதான் கேப்டன் ஆக இருப்பார்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையையும் படைத்திருக்கிறார்.

- Advertisement -