தோனி முதன் முதலாக.. கேஎல் ராகுலை பார்த்த உடனே அதை சொல்லிட்டார் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
482
Dhinesh karthik and Kl rahul

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆகத் திகிழ்ந்து கொண்டிருந்த கேஎல் ராகுல் தற்போது தனது பழைய பார்மை மீட்டெடுக்க போராடி வருகிறார். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரின் மூலமாக இந்திய அணிக்கு திரும்பிய நிலையில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் தற்போது வங்கதேச அணிக்கு எதிராகவும் தொடர்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கே எல் ராகுல் குறித்து மகேந்திர சிங் தோனி கூறிய சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்துள்ளது. தொடக்கத்தில் சில விக்கட்டுகள் விரைவிலேயே இழந்தாலும் அதற்குப் பிறகு ஜடேஜா மற்றும் அஸ்வின் கூட்டணி மிகச் சிறப்பாக விளையாடி சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டு எடுத்தது.

இதனால் வங்கதேச அணிக்கு சவாலான ரன்களை நிர்ணயிக்கும் என்கிற நிலையில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் கே எல் ராகுலின் ஆட்டம் தொடர்ச்சியாக மந்தமான நிலையிலேயே இருக்கிறது. சென்னை ஆடுகளத்தின் சூழ்நிலையை கருதி அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அதிரடியை கையில் எடுத்த நிலையில் ராகுல் அதிரடியாகவும் ஆடாமல் தடுப்பாட்டத்திலும் ஈடுபடாமல் ஒரு மாதிரியாக தனது விக்கட்டை பறிகொடுத்தார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரராக இருந்த இவரை இந்திய நிர்வாகம் மிடில் வரிசைக்கு மாற்றியது. மிடில் வரிசையிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டாலும் சமீபகாலமாக இந்த ஆர்டரில் மிகச் சொதப்பலான பேட்டியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தோனி கூறியதாக ராகுல் குறித்து சில கருத்துக்கள் கூறியிருக்கிறார்.

கே.எல் ராகுல் குறித்து தினேஷ் கார்த்திக் “ராஞ்சியில் ஒருநாள் போட்டி நடைபெற்றது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது மகேந்திர சிங் தோனி ஜிம்முக்கு வந்தார். கேஎல் ராகுலின் நிலையைப் பார்த்த தோனி ‘கே எல் ராகுல் மூலமாக இந்தியா அனைத்து வகையிலும் தொடக்க ஆட்டக்காரரை கண்டுபிடித்ததாக நான் நினைக்கிறேன்’ என்று மகேந்திர சிங் தோனி கூறியதாக தினேஷ் கார்த்திக் தற்போது தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:அஸ்வின் ஜடேஜா பேட்டிங்.. வியப்பில் சச்சின் வெளியிட்ட பதிவு.. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சி

அதாவது கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்பது தோனியின் விருப்பம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -