ஒரே நாளில்.. இந்த 3 விஷயத்தை செய்ய.. இந்திய அணியால் மட்டுமே முடியும்.. அதன் ஆழம் பெரிது – ஸ்டார்க் பிரமிப்பு

0
113

இந்திய வீரர்கள் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் விளையாடி முடித்த நிலையில் அதற்கு அடுத்ததாக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இந்திய கிரிக்கெட் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதற்கு பின்னர் இந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடி உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும், தனது தவறுகளை திருத்திக் கொண்டு தற்போது சாம்பியன் ஆகியிருக்கிறது.

மேலும் இந்திய டி20 அணியும் தற்போது சூரியகுமார் தலைமையில் மிகச் சிறந்த வெற்றிகளை பெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்கள் அனைவரும் அந்த அணியின் ஒரு அங்கமாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணிக்கு ஏராளமான திறமையான வீரர்கள் கிடைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் இது குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் ஆழம் பெரிது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் தொடர் என ஒரே நாளில் மூன்று தொடரையும் விளையாடக்கூடிய ஒரு அணி இருக்கும் என்றால் அது நிச்சயம் இந்திய அணியாக மட்டுமே இருக்க முடியும். ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் ஒரே நாளில் இந்திய அணியால் விளையாட முடியும். அதுவும் போட்டித் தன்மையோடு விளையாட முடிகிற அணி என்றால் அது இந்திய அணி மட்டுமே.

இதையும் படிங்க:இனி முடுஞ்சு.. என்கிட்ட எதிர்பாக்காதீங்க.. நான் விளையாடும் கடைசி தொடர் இது – விராட் கோலி சூசகம்

ஐபிஎல் தொடர் என்பது ஒரு சிறந்த போட்டி தொடராகும். ஆனால் வெளிப்படையாக நீங்கள் அங்கு திறமையை கொண்டிருக்க வேண்டும். மேலும் ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய கிரிக்கெட்டின் ஆழமும் தற்போது பெரிய அளவில் உள்ளது” என்று ஸ்டார்க் புகழ்ந்து பேசி இருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் சிறந்த உள்நாட்டு வீரர்களை தங்கள் அணிக்குள் கொண்டு வருகிறார்கள். இதனால் அவர்களது திறமையும் எளிதாக வெளிச்சத்திற்கு வந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறது.

- Advertisement -