ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக அக்டோபர் மாதம் முதல் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கருண் நாயர் இடம் பெறாதது குறித்து அதற்கான விளக்கத்தை தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்த தொடரில் சுப்மான் கில் கேப்டனாக செயல்படுகிறார். கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற கருண் நாயர் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை.
அவருக்கு பதிலாக மற்றொரு இளம் வீரரான தேவதத் படிக்கல் இந்தத் தொடரில் இடம் பெற்றிருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரின் இறுதியில் காயம் காரணமாக ஆர்சிபி அணியில் விளையாடாமல் இருந்த படிக்கல், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. இந்த சூழ்நிலையில் படிக்கல் இடம் பெற்றதற்கான காரணம் குறித்தும், கருண் நாயர் இடம்பெறாமல் போனதற்கான காரணம் குறித்தும் தினேஷ் கார்த்திக் சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “படிக்கலுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு இந்தியா ஏ அணிக்காக 80 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா விளையாடுவதற்கு கடினமான இடம் என்றாலும் அங்கு அவர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தரம்சாலாவில் 50 ரன்கள் எடுத்தார். அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினாலேயே கடந்த இங்கிலாந்து தொடரில் அவருக்கு பதிலாக கருண் நாயர் இடம் பெற்றார்.
இதையும் படிங்க:யாரும் ரன் அடிக்காத மேட்ச்ல ரன் எடுத்தேன்.. அதை கண்டுக்காம என்னை தூக்கிட்டாங்க – கருண் நாயர் வருத்தம்
இல்லையென்றால் இங்கிலாந்து தொடரில் முதல் நாளில் இருந்தே தேவ்தத் அணியில் இடம் பெற்றிருப்பார் என்பதை உண்மை. இதனால் தான் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். கருண் நாயர் இனி கவனிக்கப்படாமல் அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்று அர்த்தம். கடினமான ஆடுகளங்களில் கடினமான தொடர் ஒன்றில் அவர் விளையாடினார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் தன்னை தானே கேட்டுக் கொண்டால் இங்கிலாந்து அணிக்கு திராவிட முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்க முடியுமா? என்று கேட்பார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.






