டீம்ல இருக்கனும்னா இவங்க ரெண்டுபேரும் மனசு வைக்கணும்; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!

0
3028

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற தினேஷ் கார்த்திக் அணியில் நடக்கும் சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடர் முடிவுற்ற பிறகு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி 29ம் தேதி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் 24 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இந்தியா 15 ஓவர்களில் 127 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 19 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 41 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அதிரடியை வெளிப்படுத்த முயற்சித்து அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ப்ரூக்ஸ் 20 ரன்களும், கிமோ பால் 18 ரன்களும் அடித்திருந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 122 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்திருந்தது. 

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த தொடரில் 1-0 என்ற கணத்தில் முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷிதீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகிய மூவரும் தலா இரண்டு விக்கெடுகள் வீழ்த்தினர்.

19 பந்துகளில் 41 ரன்கள் அடித்து முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் ஸ்கோரை கடினமான இலக்காக மாற்றி, 215 ஸ்ட்ரைக் ரேட் உடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் தினேஷ் கார்த்திக் பேசுகையில், “மைதானம் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாகவே இருந்தது. நான் எப்போதும் களமிறங்கும் தருணம் சுவாரசியமாகவே இருக்கும். எனது அதிரடியை வெளிப்படுத்துவதற்கு அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் பக்க பலமாக இருந்தனர். நான் எனது அதிரடியை வெளிப்படுத்துவது எந்த நேரம் வேண்டுமானாலும் எனக்கு பாதகமாகவும் அமையலாம். ஆனால் தொடர்ந்து என்னை அணியில் வைத்திருப்பதற்கு இவர்கள் இருவரும் தான் காரணம். 

அணியின் பயிற்சியாளர் என்னை பற்றி யோசிக்க வேண்டும் மற்றும் கேப்டன் நான் சரியாக இருப்பேன் என உணர வேண்டும். இருவரும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். நம்புகின்றனர். மேலும் எந்த நேரத்தில் எந்த ஷார்ட் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து அனுபவம் மூலம் கற்றுக் கொண்டுள்ளேன். ஆகையால் கணிசமாக என்னால் விளையாட முடிகிறது.” என்றார்.