நடந்து முடிந்த டி20 உலக கோப்பையோடு இந்திய அணியின் சிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
தற்போது இந்த இரண்டு வீரர்களின் இடத்தை நிரப்புவதற்காக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் நான்கு வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்.
பத்தாவது டி20 உலக கோப்பை அடுத்ததாக இலங்கையில் நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் அதற்கான இந்திய அணியை தயார் செய்யும் முனைப்பில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் களமிறங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், அவர்களது இடத்தை நிரப்பவும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
எனவே இனிவரும் தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து இந்திய நிர்வாகம் அடுத்த டி20 உலக கோப்பை காண வீரர்களை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் விராட் மற்றும் ரோஹித்தின் இடத்தை நிரப்ப நான்கு இளம் வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார். இதில் ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் கண்டிப்பாக இடம் பெறுவார் என்று நினைக்கிறார்.
இது பற்றி அவர் கூறும் பொழுது “முதலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை நிரப்புவது கடினம். ஆனால் பிளேயிங் லெவனில் தற்போது நான்கு வீரர்கள் இருப்பதாக நினைக்கிறேன். ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் நிச்சயமாக இருப்பார் என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
மேலும் அபிஷேக் ஷர்மா குறித்துக் கூறிய தினேஷ் கார்த்திக் “அபிஷேக் ஷர்மா ஒரு வருங்கால சூப்பர் ஸ்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் அடித்த 100 ரன்கள் அவரது திறமையை நன்றாக வெளிக்காட்டி இருக்கிறது. ஆனால் இந்த திறமை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து வெளிவர வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டதை போலவே சர்வதேச கிரிக்கெட்டிலும் நன்றாக செயல்பட்டால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலமாக இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:வலை பயிற்சியில.. இந்த வீரர் என் பவுலிங்க ஆட வரவே மாட்டார்.. இன்னொருத்தர் சவால் விடுவாரு – முகமது ஷமி சுவாரசிய தகவல்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் களம் இறங்கிய ருத்ராஜ் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். இருப்பினும் அவருக்கு அடுத்த நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இனி வரும் தொடர்களில் அவருக்கான வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.