இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய இதன் மூலமாக வாசிம் அக்ரமின் மிகப்பெரிய சாதனையை பும்ரா உடைத்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், கேப்டன் கில், ரிஷப் பண்ட் மூவரும் சதம் அடித்தார்கள். இந்திய அணி 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய வேகத்திலேயே முதல் ஓவரில் அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி விக்கெட்டை இழந்தது. இந்த விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இரண்டு முறை பென் டக்கெட்டுக்கு கேட்ச் வாய்ப்பை உருவாக்கினார். இதை ஜெய்ஸ்வால் மற்றும் ஜடேஜா தவற விட்டார்கள்.
இதைத்தொடர்ந்து விளையாடிய பென் டக்கெட் அரை சதம் அடித்திருக்க மீண்டும் பந்துவீச்சுக்கு வந்த பும்ரா அவரை போல்ட் ஆக்கி அனுப்பி வைத்தார். இதற்கு அடுத்து ஒல்லிப் போப்புக்கு மீண்டும் பும்ரா கேட்ச் வாய்ப்பை உருவாக்கினார். இதை மீண்டும் ஜெய்ஸ்வால் தவறவிட்டார். தற்போது பும்ரா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
பெருமை சாதனை உடைந்தது
பாகிஸ்தான் ஆசியாவில் வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கும் தொழிற்சாலை என்ற சிறப்பை பெற்றிருக்கக் கூடிய நாடு. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றியவராக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் சாதனையை வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இரண்டு விக்கெட் கைப்பற்றிய பும்ரா வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்து, சேனா நாடுகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஆசிய பந்துவீச்சாளராக சாதனையை படைத்தார்.
இதையும் படிங்க : 148 வருடத்தில் முதல் முறை.. இந்தியா இங்கிலாந்து போட்டிகள் நடந்த ஆச்சரிய நிகழ்வு.. ஆனால் சோகம்
147 – ஜஸ்பிரித் பும்ரா (20.99)*
146 – வாசிம் அக்ரம் (24.11)
141 – அனில் கும்ப்ளே (37.04)
130 – இஷாந்த் சர்மா (36.86)
125-எம் முரளிதரன் (26.69)
123 – முகமது ஷமி (32.88)
119 – ஜாகீர் கான் (31.47)
117 -கபில் தேவ் (33.07)
113 – வக்கார் யூனிஸ் (29.15)






