சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான முன்னாள் வீரர் தோனி மற்றும் இந்நாள் வீரர் ரிஷப் பண்ட் இருவரில் யார் சிறந்தவர்? என்ற விவாதத்திற்கு தினேஷ் கார்த்திக் பதில் கூறியிருக்கிறார்.
நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்தவர் தோனியா ரிஷப் பண்ட்டா? என்கின்ற விவாதங்கள் மிக அதிகமாக உருவாகி இருக்கிறது. தற்போது இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தினேஷ் கார்த்திக் பதில் அளித்து இருக்கிறார்.
56 டெஸ்ட் போட்டிகள் குறைவு
மகேந்திர சிங் தோனி ஒட்டுமொத்தமாக 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடினார். அதில் மொத்தம் அவர் ஆறு சர்வதேச டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி விராட் கோலி இடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
அதே நேரத்தில் ரிஷப் பண்ட் தன்னுடைய ஆறாவது டெஸ்ட் சதத்தை 34-வது டெஸ்ட் போட்டியில் அடித்திருக்கிறார். தோனியை விட 56 டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாகவே அவர் அடித்த சதத்தை சமன் செய்து விட்டார். இது மட்டும் இல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 ரன்களுக்கு மேல் ஆறு முறை ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியா ரிஷப் பண்ட்டா? தினேஷ் கார்த்திக் பதில்
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் 34 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இந்த நிலையிலேயே ரிஷப் பண்ட்டை சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்று சொல்லக்கூடாது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுப்போம். நிச்சயமாக அவர் அதற்கான தகுதியுடன் இருக்கிறார். எதிர்காலத்தில் சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக முடிப்பார்”
இதையும் படிங்க : கே எல் ராகுலுக்கு கம்பீர் செய்வது நியாயமே இல்லை.. அவரை இன்னும் என்னெல்லாம் பண்ண போறீங்க – ஆகாஷ் சோப்ரா கேள்வி
“விக்கெட் கீப்பராக தோனியின் சிறந்த செயல்பாடுகளை நாம் புறக்கணித்து விட முடியாது. மேலும் இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் அவர் அற்புதமான முறையில் பேட்டிங் செய்திருக்கிறார். மேலும் அவர் கேப்டனாக இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தில் வைத்திருந்திருக்கிறார். எனவே இந்த விவாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி கேப்டனாக செய்திருக்கும் விஷயங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.