இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ஓய்வு நேரத்தில் லண்டனில் என்ன செய்தார் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடர் முடிவு அடைந்த பிறகு விராட் கோலி லண்டனில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்காக இந்தியா திரும்பி இந்திய அணியுடன் இணைந்து பயணப்பட்டு இருக்கிறார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி விளையாட முடிந்திருக்கும். அவர் நல்ல உடல் தகுதி உடன் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தார். இருந்த போதிலும் கூட டி20 உலகக் கோப்பையை வென்றதும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அவர் விரும்பினால் அவரைத் தேர்வு செய்ய தயாராக இருந்த போதும் விராட் கோலி இந்த முடிவை எடுத்தார். எனவே அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் திடீரென ஓய்வு முடிவை எடுக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தெரிவிக்கும் போது ” விராட் கோலி லண்டனில் நீண்ட ஓய்வில் இருந்த காலத்தில் அவர் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். வாரத்தில் மூன்று அல்லது நான்கு பயிற்சி அமர்வுகள் என அவர் கிரிக்கெட் பயிற்சியை எளிதாக செய்தார். இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதில் அந்த மனிதர் மிகவும் தீவிரமாக இருக்கிறார் என்பதைத்தான் இது உங்களுக்கு காட்டுகிறது”
இதையும் படிங்க : ஆஸி தொடருடன் ஓய்வா?.. விராட் கோலி அளித்த வெளிப்படையான பதில்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி
“விராட் கோலி அருகில் இருந்தால் எனக்கு எந்தவிதமான பதற்றமும் இருக்காது. அழுத்தத்தின் கீழ் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு மிக நன்றாக தெரியும். பலமுறை அவர் இப்படிப்பட்ட நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்திருக்கிறார். அவரால் மீண்டும் இந்த வேலையை செய்ய முடியும் என்றும் எனக்குத் தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.