இந்தியாவுக்கு செமி பைனலில் ஆஸிதான் வேணும்.. ஆனா ஒரு விஷயத்தை நம்ப மாட்டேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
130
DK

நடப்புச் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செமி பைனலில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடுவதை தான் விரும்புவதாக இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தொடரில் ஒரு பிரிவில் இருந்து முதல் இடத்தை தென் ஆப்பிரிக்க அணியும் இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியா அணியும் பிடித்து செமி பைனலுக்கு தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணி யாருடன் மோதும்?

இன்னொரு பிரிவில் இந்தியா நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே செமி பைனலுக்கு தகுதி பெற்றுவிட்ட போதிலும், இன்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி குழுவில் முதலிடத்தை பிடிக்கும், தோல்வியடையும் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

இந்திய அணி முதல் இடத்தை பிடித்தால், இன்னொரு குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும். அதுவே இன்றைய போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தை பிடித்தால் இன்னொரு குழுவில் முதல் இடத்தை பிடித்திருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி வேண்டும்

இந்த நிலையில் செமி பைனலில் இந்திய அணிக்கு எதிராக எந்த அணி மோதினால் நன்றாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக் ” தற்போது இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் விளையாடிகொண்டு வருகிறது. இருந்தபோதிலும் எனக்கு செமிபைனலில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி இருந்தால் அது சிறந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க : இந்தியா நல்ல டீம்னா.. பாகிஸ்தான் கூட எல்லா ஃபார்மட்லயும் 10 மேட்ச் ஆடுங்க பாக்கலாம் – சக்லைன் முஸ்டாக் சவால்

“நான் இளமையாக இருந்த பொழுது தொடரின் ஆரம்பத்திலேயே பாகிஸ்தானும் இங்கிலாந்தும் வெளியேறிவிடும் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் உண்மையில் நான் அதை நம்பி இருக்க மாட்டேன். ஏனென்றால் அந்த அணிகள் எவ்வளவு வலிமையானவைகள் என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும். தற்போது அந்த அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறி இருப்பது ஏமாற்றம் கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -