இந்தியா நல்ல டீம்னா.. பாகிஸ்தான் கூட எல்லா ஃபார்மட்லயும் 10 மேட்ச் ஆடுங்க பாக்கலாம் – சக்லைன் முஸ்டாக் சவால்

0
457
Saqlain

இந்திய அணி தைரியம் இருந்தால் எல்லா ஃபார்மெட்டிலும் பத்து போட்டிகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினால் யார் சிறந்த அணி என தெரிந்துவிடும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டக் அதிரடியாக கூறியிருக்கிறார்.

இந்தியா அணி அரசியல் காரணங்களால் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது கிடையாது. அதே சமயத்தில் ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முடிவுக்கு வராத சோகம்

இதுவரை ஐசிசி உலகக்கோப்பை தொடர்களில் 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை மட்டுமே பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. அவர்களது வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக பெரிய வெற்றிகள் எதுவும் கிடையாது.

மேலும் இந்திய அணிக்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கு மேலே விளையாடாமல் இருந்து வருவதும் அந்த அணிக்கு திறமை ரீதியாகவும் வருமானரீதியாகவும் பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மீண்டும் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

முடிந்தால் மோதிப் பாருங்கள்

இது குறித்து சக்லைன் முஸ்டாக் கூறும்பொழுது ” நாம் அரசியல் விஷயங்களை ஒதுக்கி வைத்தால் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் சிறப்பான முறையில் விளையாடுகிறது. இந்திய அணி உண்மையில் சிறப்பான அணியாக இருக்கும் என்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அனைத்து பார்மெட்டிலும் தலா 10 போட்டிகள் விளையாட வேண்டும். பின்னர் யார் சிறந்த அணி என்பது தெரிந்துவிடும்”

இதையும் படிங்க : 10 முறை அந்த டீம் இந்தியாவுக்கு எதிரா மோதினா.. அதில் பத்து முறையும் இந்திய அணிதான் வெல்லும் – ஹர்பஜன் சிங் பரபரப்பு

“நாங்கள் எங்கள் தயாரிப்பை சரியாக செய்து நாங்கள் எங்களை சரியான முறையில் வரிசைப்படுத்திக் கொண்டால், உலகிற்கும் இந்தியாவிற்கும் நாங்கள் சரியான பதிலை கொடுக்கக்கூடிய இடத்தில் நிச்சயம் இருப்போம். பாகிஸ்தான் அணி திறமையானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -