இந்திய கிரிக்கெட்

ரோஹித் அது ஒரு சாதாரண பந்து.. நீங்களே இந்த புள்ளி விபரத்தை பாருங்க – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்த பந்து மிகவும் சாதாரண பந்து என தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா வழக்கமாக பந்து கொஞ்சம் நேராக மாறினாலே அதில் ஆட்டம் இழப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக இந்த குறையை அவர் சரி செய்யாமல் இருப்பது பலரையும் விமர்சனம் செய்ய வைத்திருக்கிறது.

ரோகித் சர்மாவின் பிரச்சனை

ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவது என்று முடிவு செய்த காலகட்டத்தில் இருந்து அவருக்கு இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அவர் எல்லா பந்தையும் அடிப்பதற்காக தயாராக இருப்பதால், பந்து காற்றிலோ அல்லது ஆடுகளத்தில் பட்டு நகர்ந்தால் பெரிய அளவில் சிரமப்படுகிறார்.

நேற்றைய போட்டியிலும் சவுதி பந்தை காற்றில் வெளியில் எடுத்தார். முதலில் பந்து இருந்த திசைக்கு ரோஹித் சர்மா ஆடச்சென்று, பந்து காற்றில் திரும்பியதும் அந்த திசையை தவற விட்டு போல்ட் ஆனார். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு முக்கிய விக்கெட்டை கொடுத்து ஏமாற்றினார.

- Advertisement -

அது ஒரு சாதாரண பந்து

“இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ரோஹித் ஆட்டம் இழந்த பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இந்த முறையில் சவுதி பலமுறை விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இதற்கான புள்ளிவிபரத்தை நீங்கள் எடுக்க விரும்பினால் ஒட்டுமொத்தமாக ரோகித் சர்மா விக்கெட்டை சவுதி 14 முறை கைப்பற்றி இருக்கிறார். அவர் ரோஹித்தை விட மேலே இருக்கிறார். எனவே ரோஹித் சர்மா விரும்பாத பந்துவீச்சாளராக அவர் இருக்கிறார். இதன் காரணமாக தற்காப்பாக விளையாடச் சென்று ஆட்டம் இழந்தார்”

இதையும் படிங்க : சுந்தர பாராட்டினது போதும்.. அவர் மட்டும் இதை செய்யலனா இந்திய அணி கண்டிப்பா சிக்கலில் மாட்டிருக்கும் – பார்த்தீவ் பட்டேல் பேட்டி

“சவுதிக்கு அந்தப் பந்து நிரந்தரமாக இருக்கும் ஒரு ஸ்டாக் பந்து. ஆனால் அந்தப் பந்தில் பெரிதாக எதுவும் கிடையாது. அந்தப் பந்து ஸ்டெம்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் ஸ்விங் ஆனது. இதைத்தான் சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல பவுலர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். ரோஹித் அந்தப் பந்தை ஆடிய விதம் சரியானது கிடையாது. அது ஒரு சாதாரண பந்து” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -
Published by