நாங்க அஸ்வினுக்கு அந்த அநியாயத்த செய்றோம்.. நியாயமா இதைத்தான் செய்யனும் – தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்

0
777
Ashwin

உலக கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தர வேண்டிய இடமே வேறு என்றும், அவருக்கு நாம் அநியாயம் செய்து கொண்டிருக்கிறோம் எனவும் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 113 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து பந்துவீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகனாக வந்தார்.

- Advertisement -

கொட்டிய பல சாதனைகள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றிய பொழுது அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் என்கின்ற சாதனையை படைத்தார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன் வார்னுடன் இணைந்து 37 வது முறையாக 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இந்த பட்டியலில் முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.

மேலும் ஒரே மைதானத்தில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை இரண்டு முறை கைப்பற்றிய ஒரே வீரராக 147 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதித்திருக்கிறார். மேலும் நான்கு முறை சதமும் அதே போட்டியில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றிய வீரராகவும் இருக்கிறார். இப்படி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என பல சாதனைகள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரிடம் இருக்கிறது.

- Advertisement -

அஸ்வினுக்கு நாம் நியாயம் செய்யவில்லை

தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “அஸ்வின் உடைய சில சாதனைகளை பார்க்கும் பொழுது அவை நம்மை துள்ளிக் குதிக்க வைக்கும் அளவிற்கு திகைப்பூட்ட கூடியவையாக இருக்கிறது. குறைந்தபட்சம் அஸ்வினை சிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் வைக்க வேண்டும்.நாம் அஸ்வின் ஒரு போட்டியில் எடுத்துள்ள ஐந்து விக்கெட் மற்றும் சதம் பற்றி பேசும் பொழுது, அவர் கிரிக்கெட்டின் சிறந்த ஆல் ரவுண்டர் இயான் போத்தமுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்”

இதையும் படிங்க : 170 ரன்.. ஆப்கானிடம் ஒயிட் வாஷில் காப்பாற்றிய மார்க்ரம்.. தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி

“சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலை பற்றி எடுத்து பேசினால் அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் 400 டிக்கெட்டுக்கு மேல் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்து பார்த்தால் அஸ்வினை விட ஸ்டெய்ன் மட்டுமே முன்னால் இருக்கிறார். நாம் சில நேரங்களில் அஸ்வினிடம் நியாயம் இல்லாமல் நடந்து கொள்கிறோம். அவர் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்று கூறுகிறோம். இது நாம் அவருக்கு செய்யும் அநியாயம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -