6 சதம்.. 752 ரன்.. ஆனாலும் கருண் நாயரை டீம்ல எடுக்க மாட்டாங்க.. காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
429
Karun

நடப்பு இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விதர்பா அணிக்காக விளையாடும் கருண் நாயர், 6 சதங்கள் உட்பட 752 ரன்கள் 7 போட்டியில் எடுத்திருந்தாலும் கூட, அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள் என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

தற்போது கருண் நாயரின் பேட்டிங் ஃபார்ம் நம்ப முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. ஏழு போட்டிகளில் அவர் இவ்வளவு சதம் மற்றும் இவ்வளவு ரன்கள் எடுத்திருந்தாலும் கூட, இதில் இன்னொரு ஆச்சரியப்படும் செய்தியாக அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இதில் ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பதும்தான். மேலும் அவருடைய ரன் ஆவரேஜ் 752 என பிரம்மாண்டமாக இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்தில் ஆரம்பித்த மறுவாழ்வு

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் பெரிதான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டார். இன்று வரையில் இந்திய கிரிக்கெட்டில் இது ஒரு ஆச்சரியமான அதிர்ச்சியான சம்பவமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் அணியான நார்த்தாம்டன்ஷைர் அணிக்கு விளையாட கடந்த வருடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்து சென்ற கருண் நாயர் கவுன்டி கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் விளையாடி சதங்கள் அடிக்க ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து அவரது நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்க, அவருடைய பழைய சிறப்பான பேட்டிங் ஃபார்ம் வெளிவந்தது. தற்போது இது விஜய் ஹசாரே டிராபியில் எதிரொலிக்கிறது.

- Advertisement -

கருண் நாயரை இந்திய அணிக்கு தேர்வு செய்ய மாட்டார்கள்

கருண் நாயர் குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கருண் நாயர் பேட்டிங் ஃபார்ம் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மயங்க் அகர்வால் கூட சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். ஆனால் இதில் ஒரு பியூட்டி என்னவென்றால், இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான அணி ஏற்கனவே சரியான முறையில் அமைக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் அதில் புதிய வீரர்களை சேர்த்து பெரிய மாற்றங்கள் எதுவும் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை”

இதையும் படிங்க : சர்பராஸ் கான் வாழ்க்கையை ஏன் கெடுக்கறிங்க.. கம்பீர் சொன்னது எப்படி வெளியே வந்தது? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

“கருண் நாயர் விஜய் ஹசாரே டிராபியில் இவ்வளவு ரன்கள் குவித்திருந்த பொழுதும் கூட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து விளையாடினால் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார். அவர் சிறப்பான முறையில் வேகமாக ரொட்டேட் செய்து விளையாடும் ஒரு கன் பிளேயராக இருக்கிறார். அவர் மீண்டும் வந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -