தற்போது எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் முகமது ஹாரிஸ் தாங்கள் இந்திய அணியை பற்றி பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசியக் கோப்பை துவங்க இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை என மொத்தம் எட்டு ஆசிய நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. மேலும் கடந்த முறை முகமது ஹாரிஸ் தலைமையில் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணி எங்கள் இலக்கு கிடையாது
இந்த தொடர் குறித்து பேசி இருக்கும் முகமது ஹாரிஸ் பேசும் பொழுது “இந்திய அணி எங்களுடைய இலக்கு கிடையாது. நாங்கள் முழு தொடரிலும் விளையாட வேண்டும். எங்களுடைய குழுவில் இந்தியா மட்டும் இல்லாமல் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இருக்கின்றன. நாங்கள் எல்லா அணிக்கு எதிராகவும் சமமாகவே தயாராகி வருகிறோம்”
“கடந்த ஆண்டும் நான் இதே தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை வைத்து இந்த தொடரில் முதலீடு செய்கிறது. அவர்கள் எதிர்பார்ப்பதை செய்து தருவதே என்னுடைய வேலை. நான் இந்த தொடரில் அதை செய்வேன். மேலும் நான் இந்த தொடரை தவிர என்னுடைய தனிப்பட்ட கிரிக்கெட் எதிர்காலத்தை பற்றி எதுவும் நினைக்கவில்லை”
இந்திய அணியை பற்றி பேச தடை
மேலும் பேசிய முகமது ஹாரிஸ் “இந்தத் தொடரில் எங்களுடைய டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய அணியை பற்றி பேச தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நடப்பது இதுவே முதல் முறை. மேலும் இந்திய அணி பற்றி மட்டும் இல்லாமல் வேறு எந்த அணிகளை பற்றியும் தனிப்பட்ட முறையில் நாங்கள் சிந்திக்க போவது கிடையாது”
இதையும் படிங்க : இன்னும் 258 ரன்கள் 13 சிக்ஸர்ஸ்.. ரோகித் சர்மா படைக்க இருக்கும் 2 மெகா ரெக்கார்டுகள்.. முதல் வீரராக உருவெடுப்பார்
“நான் பாகிஸ்தான் அணியில் இருந்திருக்கிறேன். மனதளவில் தைரியம் ஆவதற்கு உதவாத இந்தியாவுக்கு எதிரான போட்டியை நிறைய அழுத்தத்தை ஏற்படுத்துவதை பார்த்திருக்கிறேன். எனவே இந்திய அணியை பற்றி எதுவுமே பேசப்போவது கிடையாது. நாங்கள் அனைவருக்கும் எதிராகவும் நன்றாக விளையாட விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.






