விராட் ஓய்வால்.. யாருமே எதிர்பார்க்காத இவங்க தான் பாதிக்கப்பட போறாங்க – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
282
DK

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்ததால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

தற்போது ஆர்சிபி அணியின் மென்டராக தினேஷ் கார்த்திக் இருந்து வரும் நிலையில், அந்த அணியின் முக்கியமான வீரராக வழக்கம் போல் விராட் கோலி இருக்கிறார். இவர்கள் இருவரும் தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒன்றாக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியை பாதிக்குமா?

தற்போது விராட் கோலி திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று இருக்கின்ற காரணத்தினால் அது இந்திய அணியை பாதிக்குமா என்று பார்க்கும் பொழுது, விராட் கோலி இல்லாத பொழுது இந்திய அணி ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டிலும் டெஸ்ட் தொடரை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விராட் கோலி தற்பொழுது ஓய்வு பெற்று விட்டது இந்திய அணியை பெரிய அளவில் பாதிக்காது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் ஏராளமான இளம் திறமைகள் உருவாகி வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய மேடையிலும் பயமில்லாமல் தங்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடிய அளவுக்கு மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதை கடந்த காலங்களில் இந்திய இளம் திறமைகள் நிரூபித்திருக்கிறார்கள்.

- Advertisement -

யாருக்கு அதிகம் பாதிப்பு?

தற்போது இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “விராட் கோலி தற்போது வெளியேறி இருப்பதால் இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் நிச்சயமாக தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். மக்கள் அதிகம் வருகை தராத டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி யாரும் எதிர்பார்க்காத ஒரு கவர்ச்சியை கொண்டு வந்தார். அது ஒளிபரப்பாளர்களுக்கு பெரிய விஷயமாக அமைந்தது”

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்.. விராட் கோலியின் 4வது இடத்துக்கு.. எந்த வீரர் சரியாக இருப்பார்? – புஜாரா ஐடியா

“விராட் கோலி சிறப்பாக விளையாடும் பொழுது அவர் பின்னால் எல்லோரும் ஓடுகிறார்கள். அவர் சதம் அடித்தார், அவர் பவுண்டரி சிக்சர் அடித்தார் என பேக்கேஜ்களை உருவாக்கி ஒளிபரப்புகிறார்கள். மேலும் கடந்த இரண்டு ஆண்டாக இந்திய பேட்டிங் யூனிட் சரியாக செயல்படாத நிலையில் கூட விராட் கோலியின் பேட்டிங் பற்றிதான் அதிகம் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -